Author: Admin

கடந்து எட்டு வருடங்களில் மோடி அரசு ஒரு திட்டத்தை அறிவிப்பதும் யாருக்காகக் கொண்டு வரப்படுகிறதோ அவர்களே அத்திட்டத்தை எதிர்ப்பதும் வாடிக்கையாக உள்ளது. பண மதிப்பீடு நடவடிக்கை கருப்பு பணத்தை முற்றிலுமாக ஒழிக்கும் என்று கூறி அத்திட்டத்தை எந்தவித முன்னறிவிப்புமில்லாமல் அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் முந்தைய காலங்களை விடவும் இப்பொழுது கருப்பு பணத்தின் விகிதம் அதிகமாகியிருக்கிறது என்று கூறுகிறது புள்ளிவிவரங்கள்.விவசாயிகள் நலன் பெறுவார்கள் என்று கூறி அறிவிக்கப்பட்ட வேளாண் சட்டம் விவசாயிகளிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. நாடெங்கும் உள்ள விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஜிஎஸ்டி வரி சிறு குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் என்று நடைமுறைபடுத்தப்பட்ட திட்டம். மாறாக இலட்சக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்து அவர்களை தெருவில் நிற்க வைத்துள்ளளது. இவ்வாறாக மோடி அரசு அறிவிக்கும் ஒவ்வொரு திட்டமும் மக்களையும் மக்கள் நலனையும் பாதிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே தற்பொழுது…

Read More

உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஸ்ரீ வர்ஷினி சட்டக்கல்லூரியில் கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தினுள் தொழுகை நடத்தியதற்காக டாக்டர் ஷா ராசிக் காலித் எனும் பேராசிரியர் ஒரு மாதம் கட்டாய விடுப்பு கொடுத்து அனுப்பப்பட்டுள்ளார். கல்லூரிப் பூங்காவில் உள்ள புல்வெளியில் இவர் தொழுகும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானதை அடுத்து இச் சம்பவம் அரங்கேறியுள்ளது.இப்பேராசிரியரின் தொழுகையை வீடியோ வைரலானதை அடுத்து இதை குறிவைத்து இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் இப்பேராசிரியர் கல்லூரியின் அமைதிக்கு தொந்தரவு ஏற்படுத்தியதாக கூறி இவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரின.இதுகுறித்து பாரதிய ஜனதா யுவா மோர்ச்சா (BJYM) அமைப்பின் மாணவத் தலைவர் தீபக் ஷர்மா ஆசாத் பத்திரிக்கை நிருபர்களிடம் “இப் பேராசிரியர் கல்லூரி வளாகத்தினுள் தொழுகை நடத்தி கல்லூரியின் அமைதியான சூழலை கெடுக்க முயன்றார்” என்று கூறியுள்ளார்.இதனை அடுத்து கல்லூரி நிர்வாகம் இச்சம்பவத்தை விசாரிப்பதற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைத்ததுள்ளது.இதையடுத்து பேராசிரியர் ராசிக் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து குவாரசி காவல்…

Read More

ஒரு பள்ளிவாசல், பழைய இதிகாச நாயகன் அங்கேதான் பிறந்தார் என எந்த ஆதாரமும் இல்லாமல் நடத்தப்பட்ட மக்களை முட்டாளாக்கும் அரசியலை சங்பரிவாரங்கள் முன்னெடுத்தன. அதில் வெற்றியும் அடைந்தனர். பள்ளிவாசலை இடித்து, நாடெங்கும் கலவரத்தை நடத்தி, பல ஆயிரம் அப்பாவிகளைக் கொன்று கட்சியை வளர்த்தி அதிகாரத்தையும் தனதாக்கிக்கின. பிறகு அநீதியான தீர்ப்பையும் வழங்கி இந்த நாட்டின் இறையாண்மையை கேலிக்குறியதாக்கினர். படிப்பதற்கு ஏதோ பிரம்மாண்டமான திரைப்படத்தின் ஒன்லைன் என்பதுபோல உங்களுக்கு தோற்றமளிக்கலாம். ஆனால் இந்தியாவின் 70 ஆண்டுகால வரலாறும், சங்கபரிவாரங்கள் இந்த நாட்டில் செய்த அரசியலும் இதுதான். இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பிரதான எதிரியாக முன்னிருத்தி இஸ்லாமிய வெறுப்பைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம். புரோகிதர்களாக தங்களிடம் இருந்த கட்டற்ற அதிகாரத்தையும், மனுநீதியையும் மீண்டும் கொண்டு வரலாம் என திட்டமிட்டு அதில் வெற்றிகளையும் அடைந்திருக்கிறார்கள் என்பது கைப்புண்ணிற்கு கண்ணாடி தேவையில்லை என்பதுபோல அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்த ஒன்று. அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் இந்தியாவை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வார்கள்…

Read More