மக்களுக்கான சித்தாந்தங்கள் என கூறிக்கொண்டு இந்த உலகில் தோன்றியவை எல்லாம் மக்களை வஞ்சிக்கின்றன. அந்த சித்தாந்தங்களால் குறிப்பிட்ட சில வர்க்கங்களே தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்கின்றன. இத்தகைய சூழலில் மக்கள் எதிர்பார்ப்பது எல்லாம் தங்களுக்கான விடுதலையை, விடியலைத்தான் என்பதை இன்று நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். மக்களுக்கான விடியலைத் தருகிற ஒரே சிந்தனையாக இறைவன் வழங்கிய இஸ்லாமால் இருக்க முடியும். இன்று மக்களிடம் நிலவுகிற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வை எந்தவித தயக்கமும் இல்லாமல் சரியாக வழங்கிட முடியுமானால் அது இஸ்லாமால்தான் முடியும் என்பதை புரிந்துகொண்ட ஆதிக்கவாதிகளும், அவர்களின் அடிவருடிகளும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்த இஸ்லாத்தின் மீது வெறுப்புணர்வை திட்டமிட்டு உருவாக்கி வருகின்றனர். அதனைத் தான் இஸ்லாமோஃபோபியா என்கிறோம். இந்த இஸ்லாமோஃபோபியா எவ்வளவு ஆபத்தானது, அதனை எதிர்த்து வலுவானப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது ஏன் அவசியமாகிறது. அதனை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்த வேண்டிய அவசியம் என்ன? போன்றவற்றைக்…
Author: Admin
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். மாஹி-மாண்டாவி என்ற விடுதியில் இரவு உணவு அருந்தியதற்குப் பின்பு தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்தியார்த்தி பரிசத்தைச்(ABVP) சேர்ந்த மாணவர்கள் ஒவ்வொரு அறையாகச் சென்று பிரச்சாரம் செய்யும் போது ஒரு அறையில் நஜீப் அகமது இருந்தார். முதுகலை உயிரித் தொழில்நுட்பம் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் நஜீபுக்கு விடுதி கிடைத்து இரண்டு வாரங்களே ஆகின. ஜாமியா மில்லையா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தும் ஜே.என்.யு.வில் தான் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தில், இந்த வளாகத்திற்கு வந்தவர் நஜீப். இஸ்லாமிய வெறுப்பைக் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தும் பாஜகவினரும் அவர்களது மாணவ அமைப்பும் இயல்பாகவே முஸ்லிம்களைப் பார்க்கும்போது, வெறுப்பும் அவர்களைத் தாக்க வேண்டும் என்ற எண்ணமும் கொண்டிருக்கின்றனர். ஓட்டுக் கேட்பதாக நஜீப் அறைக்குள் சென்றவர்கள், அங்கும் வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.…
ஒரு நாட்டியில் மாணவ- இளைஞர்களின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவர்களின் வளர்ச்சி தான் சமூகத்தின் வளர்ச்சியாகவும் நாட்டினுடைய வளர்ச்சியாகவும் அமைகிறது. அவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் போதும் விளையாட்டில் வெற்றி அடையும் போதும் பல துறைகளில் பல சாதனைகள் செய்யும் போதும் அது அந்த நாட்டின் வெற்றியகவும் சாதனையாகவுமே கருதப்படுகிறது. இந்தியாவில் மாணவ- இளைஞர்களின் மக்கள் தொகை என்பது அபாரமானது. உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவ- இளைஞர்கள் இங்கு வாழ்கிறார்கள். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 54% பேர் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மேலும் இந்திய மக்களின் சராசரி வயது 29 தான். வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானில் கூட சராசரி வயது முறையே 4௦, 46, 47 என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி எந்த நாட்டிடமும் இல்லாத தனித்தன்மையான சூழல் இருந்தும் கூட இந்திய மனிதவள…
https://youtu.be/P_5KGttkkQQ
‘Life without Liberty is like a body without soul’ ‘சுதந்திரம் இல்லாத வாழ்க்கை ஆன்மா இல்லாத உடலை போன்றது ‘ இயேசு கிறிஸ்து தனது புகழ்பெற்ற மலை பிரசங்கத்தில் சொன்ன வார்த்தைகள் இது. சுதந்திரம் – அது ஒரு மனிதனின் தவிர்க்கவியலா தேவை. தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் அவர்கள் வாழும் நாட்டிலும் சுதந்திரமும் சுதந்திரச் செயல்பாடுகளும் இன்றியமையாதது. தங்கள் எஜமானர்களை அண்டிப் பிழைப்பவர்களுக்கும் சில நேரங்களில் அவர்களின் ‘ஷூக்களை’ நக்கிப் பிழைப்பவர்களுக்கும் சுதந்திரத்தின் மேன்மை புரியாது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்து விட்டது. நாடு முழுவதும் அமுதப் பெருவிழா – அம்ரித் மஹோட்சவ் – ஒன்றிய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. தடைகள் இல்லா சுதந்திரமும் எல்லைகள் இல்லா மானிடமும் தழைத்து நிற்கும் ஒரு மண்ணை உருவாகத்தான் நமது முன்னோர்கள் பாடுபட்டார்கள். ஒரு நீண்ட 75 ஆண்டு கால நெடும் பயணத்திற்குப் பிறகு அவர்கள் கண்ட கனவு…
கடந்து எட்டு வருடங்களில் மோடி அரசு ஒரு திட்டத்தை அறிவிப்பதும் யாருக்காகக் கொண்டு வரப்படுகிறதோ அவர்களே அத்திட்டத்தை எதிர்ப்பதும் வாடிக்கையாக உள்ளது. பண மதிப்பீடு நடவடிக்கை கருப்பு பணத்தை முற்றிலுமாக ஒழிக்கும் என்று கூறி அத்திட்டத்தை எந்தவித முன்னறிவிப்புமில்லாமல் அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் முந்தைய காலங்களை விடவும் இப்பொழுது கருப்பு பணத்தின் விகிதம் அதிகமாகியிருக்கிறது என்று கூறுகிறது புள்ளிவிவரங்கள்.விவசாயிகள் நலன் பெறுவார்கள் என்று கூறி அறிவிக்கப்பட்ட வேளாண் சட்டம் விவசாயிகளிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. நாடெங்கும் உள்ள விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஜிஎஸ்டி வரி சிறு குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் என்று நடைமுறைபடுத்தப்பட்ட திட்டம். மாறாக இலட்சக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்து அவர்களை தெருவில் நிற்க வைத்துள்ளளது. இவ்வாறாக மோடி அரசு அறிவிக்கும் ஒவ்வொரு திட்டமும் மக்களையும் மக்கள் நலனையும் பாதிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே தற்பொழுது…
https://youtu.be/YOsNFIu4G9o கலந்டுரையாடுபவர் – மௌலவி நாசர் புகாரி (முன்னாள் மாநிலத் தலைவர், sio தமிழ்நாடு)
https://youtu.be/hBOLU82RHKY கலந்டுரையாடுபவர் – மௌலவி நாசர் புகாரி (முன்னாள் மாநிலத் தலைவர், sio தமிழ்நாடு)
https://youtu.be/xmnLWd4XXnk
உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஸ்ரீ வர்ஷினி சட்டக்கல்லூரியில் கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தினுள் தொழுகை நடத்தியதற்காக டாக்டர் ஷா ராசிக் காலித் எனும் பேராசிரியர் ஒரு மாதம் கட்டாய விடுப்பு கொடுத்து அனுப்பப்பட்டுள்ளார். கல்லூரிப் பூங்காவில் உள்ள புல்வெளியில் இவர் தொழுகும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானதை அடுத்து இச் சம்பவம் அரங்கேறியுள்ளது.இப்பேராசிரியரின் தொழுகையை வீடியோ வைரலானதை அடுத்து இதை குறிவைத்து இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் இப்பேராசிரியர் கல்லூரியின் அமைதிக்கு தொந்தரவு ஏற்படுத்தியதாக கூறி இவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரின.இதுகுறித்து பாரதிய ஜனதா யுவா மோர்ச்சா (BJYM) அமைப்பின் மாணவத் தலைவர் தீபக் ஷர்மா ஆசாத் பத்திரிக்கை நிருபர்களிடம் “இப் பேராசிரியர் கல்லூரி வளாகத்தினுள் தொழுகை நடத்தி கல்லூரியின் அமைதியான சூழலை கெடுக்க முயன்றார்” என்று கூறியுள்ளார்.இதனை அடுத்து கல்லூரி நிர்வாகம் இச்சம்பவத்தை விசாரிப்பதற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைத்ததுள்ளது.இதையடுத்து பேராசிரியர் ராசிக் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து குவாரசி காவல்…