(அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய சொற்பொழிவாளர் யாசிர் காழி ஆற்றிய உரையின் சுருக்கம் இது.) இந்தப் பகுதியில் ஹிஜாப் குறித்து குர்ஆனிய ஒளியில் அணுகவுள்ளோம். ஓர் ஆண் ஹிஜாப் பற்றியெல்லாம் பேசலாமா, பெண்கள்தானே பேச வேண்டும் என்றெல்லாம் சமீப காலமாக ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். அதுவொருபுறம் இருக்கட்டும். என் பாலினத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் என் உரையின் உள்ளடக்கத்தைக் கேளுங்கள். அதில் நீங்கள் முரண்படும் புள்ளிகள் இருந்தால் தாராளமாக அதுகுறித்து என்னுடன் உரையாடலாம். ஷரீஆவில் ஆடை ஒழுங்குகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. ஆண்களும் பெண்களும் தங்களின் உடலில் மறைக்க வேண்டிய பகுதிகள் (அவ்றா) பற்றி குர்ஆன் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. பல அம்சங்களில் ஷரீஆவின் சட்டவிதிகளை (அஹ்காம்) விளங்கிக்கொள்ள ஹதீஸின் உதவி தேவைப்படும். ஆனால், இவ்விஷயத்தில் குர்ஆனை மட்டுமே கொண்டு நம்மால் வழிகாட்டுதல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு அதைத் தூலமாக குர்ஆன் முன்வைக்கிறது. ஹதீஸின் வழியாக கூடுதல் விவரங்களையே நாம் அறிகிறோம். எங்கும் ஆபாசம்! ஹிஜாப்…