பாத்திமா லத்திப்பின் மரணம் தொடர்பான சிபிஐ அறிக்கையை மறுத்துள்ள அவரது குடும்பத்தினர் புதிய விசாரணை கோரியுள்ளனர்.
இன்று நவம்பர் 9 – 2022 -டோடு 19 வயதான இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மெட்ராஸில் முதுகலை மானுடவியல் மாணவி பாத்திமா லத்தீப் தன்னுடைய விடுதி அறையில் மரணம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு சீ.பி.ஐ தங்களுடைய விசாரணையை நிறைவு செய்த நிலையில் பாத்திமாவின் குடும்பத்தினர் அதன் அறிக்கையில் நிறைவடையவில்லை.
சிபிஐ பாத்திமாவின் மரணத்தை வீட்டு நினைவால் செய்துகொள்ளப்பட்ட தற்கொலை என்று கூறியுள்ளது. இந்த முடிவானது பாத்திமாவின் இறுதி கடிதத்தில் அவர் “தன்னுடைய மரணத்திற்கு காரணம் சுதர்சன் பத்மநாபன் தான்” என்று குறிப்பிட்டதற்கு முரணாகவும் மேலும் அவர் சந்தித்த மனநல துன்புறுத்தல்கள் குறித்தான சாத்திய கூறுகளை நிராகரிப்பாதாகவும் இருந்துள்ளது. இந்த சுதர்சன் பத்மநாபன் என்பவர் ஐஐடி மெட்ராஸின், தத்துவவியல் மற்றும் சமூக அறிவியல் துறையின் இணை பேராசிரியர்.
பாத்திமாவின் இறுதி மரணக்குறிப்பில் தன்னுடைய ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் தன்னை துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்ததாக அவருடைய குடும்பத்தினர்கள் கூறியுள்ளனர்.
பாத்திமாவின் குடும்பத்தினர் சிபிஐ விசாரணையில் உள்ள குறைபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை எழும்பூர் தலைமை பெருநகர மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
“இறுதி மரணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்த பேராசிரியர் சரியாக விசாரிக்கப்படவில்லை” என்று பாத்திமா லத்தீபின் இரட்டை சகோதரி ஆயிஷா லதீப் தான் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பாத்திமா இந்த முன்னணி கல்வி நிறுவனத்தின் மூலம் ஜூலை 2019-ல் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் முதலிடத்தை பெற்று உள் நுழைந்த போதிலும் ஆரம்பத்தில் இருந்தே இங்கு தான் அனைத்து விஷயங்களில் இருந்தும் ஒதுக்கப்படுவதாக கூறிவந்துள்ளார்.
பாத்திமா லத்தீப் இன் தந்தை அப்துல்லா வின் மரணத்திற்கு பிறகு அளித்த பேட்டியில் தன்னுடைய மகள் கல்வி நிறுவனத்தில் தன்னுடைய ஆசிரியர்களால் “சாதிய மற்றும் மத ரீதியிலான துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகவும்” மற்றும் “அவளின் பெயரே அங்கு பிரச்சனைக்கு உள்ளாக்கப்பட்ட தாகவும்” தெரிவித்திருந்தார்.
சீபிஐ இந்த வழக்கில் இருந்த முக்கிய பிரச்சனைகளை குறித்து விசாரிக்காமல் இந்த வழக்கை எப்படி விரைவில் முடிக்கலாம் என்பதிலேயே மும்மரமாக இருந்தனர் என்று ஆயிஷா குற்றம் சாட்டியும். “அவர்கள் அளித்த விசாரணையின் முடிவை பார்த்த பிறகு எங்களுக்கு அது பெரும் ஏமாற்றத்தை அளித்தது” என்றும் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக கடந்த அக்டோபர் 17 அன்று சிபிஐ தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிரான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
கேரளாவின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பின்னணியில் பாத்திமா லத்தி பின் தந்தை அப்துல்லா நடத்திய பெரும் போராட்டத்திற்கு பிறகு இந்த வழக்கானது சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன்பின் மனுதாரர்களின் சார்பில் வழக்கறிஞர் நாகராஜன் ஆஜராகியுள்ளார்.
தன்னுடைய குடும்பத்திற்கு நீதிக்கான உதவியை வேண்டி அப்துல் லத்திப் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர்களை சந்தித்தார்.
சிபிஐயின் விசாரணையை தொடர்ந்து, தமிழ்நாட்டின் முதல்வர் மு க ஸ்டாலின் அப்துல் லத்தீப்பிற்க்கு இந்த விஷயத்தின் மாநிலத்தின் அமலாக்க இயக்குனராகங்களை பயன்படுத்தி மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டிருந்தார்.
பாத்திமா லத்தேஷன் மரணம் நாடு முழுக்க பல போராட்டங்களையும் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் இந்திய கல்வி வட்டாரங்களில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்துமான விவாதங்களையும் தூண்டியது.
தமிழில் _ ஹபீப் ரஹ்மான் (எழுத்தாளர்)