• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»குறும்பதிவுகள்»ராஜகோபாலன்கள் வேறறுக்கப்பட வேண்டியவர்கள்
குறும்பதிவுகள்

ராஜகோபாலன்கள் வேறறுக்கப்பட வேண்டியவர்கள்

AdminBy AdminMay 26, 2021Updated:May 29, 2023No Comments2 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

தலைமுறைத் தளிர்களுக்கு அறமான கல்வியை கற்பித்துக் கொடுத்து நெறிப்படுத்த வேண்டிய ஆசானே, அத்தளிர்களிடம் காமக் கல்வியை உட்புகுத்தி, தன் இச்சையைத் தீர்த்துக்கொள்ள அலையும் கேடுகெட்ட இழிநிறைந்த இக்குற்றச் சமூகத்தினூடே நாமும் வாழ்வதெண்ணி உண்மையிலேயே வெட்கித் தலை குனியத்தான் வேண்டும் மக்களே..! இத்தகைய இழிவானதொரு மனித மிருகங்களுக்கெல்லாம் இப்புவியிலே வாழத் தகுதியற்றதொரு கொடுந்தண்டனையே இறுதித் தீர்வாகும்..!

காமக் கல்வியை கற்பிக்கும் ஆசானைக் கடந்து நகர்ந்து, நிர்வாக உரிமையாளர் யாரென்று தேடினால், சுவாதியை படுகொலை செய்தது ‘பிலால் மாலிக்’ என்ற இசுலாமியன் தான் என சமூக வலைதளத்திலே ஆருடம் சொல்லி தமிழ்ச் சமூகத்தினுள் மதஉணர்வைத் தூண்டி குளிர் காய்ந்தவரும், தன்னெழுச்சியாக திரண்டெழும் மக்களின் போராட்டத்திற்கு பெண்கள் கலந்து கொள்ள வருவதெல்லாம் ஆண்களை ரசிக்கவே என்ற மிகக் கொச்சையான கருத்து வாந்தியை பொதுவெளியிலே உமிழ்ந்தெடுத்த அதே மேதாவியே..!

காமத்தையும், மதவெறுப்புச் சிந்தனையையும், சாதிய பாகுபாடு வேற்றுமையையும், கற்பித்துக் கொடுக்கும் கல்வியிலே உட்புகுத்தி, கல்வியை ஒரு வணிகப் பண்டமாக விற்பனை செய்துவரும் இழிவான வியாபாரிகளையும், கல்வியை விட்டு விட்டு மாணவர்களிடம் காமத்தை மட்டுமே தேடியலையும் இராஜகோபாலன் போன்றதொரு கேடுகெட்ட ஆசிரியர்க் கயவர்களையும், உடனே கண்டறிந்து இச்சமூகத்திலிருந்து நீதியின் வழியாக முற்றாக துடைத்தெறியச் செய்வதே மக்களால் நிறுவப்பட்ட ஒரு அரசின் தலையாய கடமையாகும்..!

இதிலே வேடிக்கையும் வியப்பும் என்னவென்றால், தனியொருவரின் பிழைக்கு நிர்வாகம் என்ன செய்யும் என்ற ஒருசில சாதியப் பாசக் குரல்களோ அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒலிப்பதுவே..! எனதருமை சாதியச் சான்றோர்களே! கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சித் தொண்டர் எங்கோ ஒரு மூலையில் செய்யும் சமூகத் தவறுக்கு, ஒட்டுமொத்த கட்சியையும் குற்றவாளிக் கூண்டிலே ஏற்றிய போது எங்கே சென்றது உங்களின் நடுநிலைக் குரல்கள்..!

இறுதியாக..! மன்னிக்கவியலா பெருஞ் சமூகக்குற்றத்தை தெளிவான தரவோடு கண்டறிந்த பின்னரும் கூட, அவாளெல்லாம் உயர்சாதியெனும் ஒற்றைக் காரணத்திற்காகவே வேண்டி, அப்பட்டமான அநீதிகளை தோலுரித்து காட்டத் தயங்கி நிற்கும் சனநாயகத்தின் நான்காவது தூணே வேதனையின் உச்சம்..!

அழகை ரிபாய்

Loading

PSBB பள்ளி ஆசிரியர் இராஜகாவ்பாலன் மாணவிகள் துன்புறுத்தல்
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
Admin
  • Website

Related Posts

ஏ.ஜி. நூரானி நினைவலைகள்

September 3, 2024

ஒழுக்க விதிகளை அறிவியலால் தர இயலுமா? ஓரினச்சேர்க்கையை முன்வைத்து ஓர் ஆய்வு

August 29, 2024

மும்பை இஸ்ரேலிய திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டதன் பின்னணி

August 21, 2024

தற்காலிக மதிப்பெண் சான்றிதழை விரைந்து வழங்க வேண்டும் – சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு SIO கோரிக்கை

August 20, 2024

இஸ்மாயில் ஹனிய்யா கொல்லப்படக் காரணம் என்ன?

August 10, 2024

இளைய தலைமுறையை படுகுழியில் தள்ளும் ஆபாசம்

July 31, 2024

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை

April 23, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.