Close Menu
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»குறும்பதிவுகள்»சாதியின் பெயரால் கொடூரமாக தாக்கப்பட்ட பள்ளி மாணவன். இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) கடும் கண்டனம்.
குறும்பதிவுகள்

சாதியின் பெயரால் கொடூரமாக தாக்கப்பட்ட பள்ளி மாணவன். இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) கடும் கண்டனம்.

AdminBy AdminOctober 13, 2019Updated:May 30, 20233,471 Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், மரவப்பட்டி காலனி, பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவன் சரவணகுமார். இவர் கடந்த 11.10.19 வெள்ளியன்று பள்ளிக்கூடத்தில் சாதியின் பெயரால் சகமாணவனால் வகுப்பறையில்  கடுமையாக தாக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. 

சரவணகுமார் 11.10.2019 அன்று தனது சக பள்ளி தோழன் மோகன் ராஜின் புத்தகப்பையை அதே வகுப்பறையில் பயிலும்  மகா ஈஸ்வரன் என்ற மாணவன் ஒளித்துவைத்து அவர்களை தேடவைக்க, அது குறித்து மகா ஈஸ்வரனிடம், மாணவன் சரவணகுமார் மற்றும் மோகன்ராஜ் விசாரித்திருக்கின்றனர். அப்பொழுது மகா ஈஸ்வரன் மாணவன் சரவணகுமாரை நோக்கி தகாத வார்த்தைகளில் பேசி நீ எல்லாம் என்னை எதிர்த்து பேசுவாயா என்று கூறி  தன்னிடமிருந்த பிளேடால் சரவணகுமாரின் முதுகில் கிழித்துள்ளார். அதில் படுகாயமடைந்த மாணவன் சரவணகுமார்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல்  என பாடம் படிக்கும் பள்ளியில் இம்மாதிரியான சாதிய ரீதியிலான தாக்குதல் சக மாணவர்கள் மீது  நடைபெறுவதை காணும்பொழுது கல்விக்கூடம் சாதிவெறியர்களை வளர்த்தெடுக்கும் கூடாரமாக மாறுகிறதா என்ற அச்சம் மேலிடுகிறது. அத்துடன் குழந்தைகள் உள்ளத்தில் வேரூன்றி இருக்கும் சாதிய மனநிலை, பள்ளி கல்வி முறையால் மாற்றப்பட வில்லையெனில், இந்த கல்வி முறையின் நோக்கத்தையும், செயல்திறனையும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது அவசியம் என Sio கருதுகிறது. 

இந்த குற்றச்செயலை   இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) வன்மையாக கண்டிப்பதுடன், இனியும் இதுபோன்று  சாதிய ரீதியான தாக்குதல்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் கல்விக்கூடங்களில் நடைபெறுவதை முற்றிலும் தடுக்கும் விதமாக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு,
முஹம்மது ஆஷிக்
கல்வி வளாக செயலாளர்
SIO தமிழ்நாடு

Loading

பத்திரிகை செய்தி
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
Admin
  • Website

Related Posts

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026

Boycott: இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை

September 27, 2025

ஷதியா அபூ கஸ்ஸாலே: ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் உயிர்த்தியாகி

September 10, 2025

ஏ.ஜி. நூரானி நினைவலைகள்

September 3, 2024

ஒழுக்க விதிகளை அறிவியலால் தர இயலுமா? ஓரினச்சேர்க்கையை முன்வைத்து ஓர் ஆய்வு

August 29, 2024

மும்பை இஸ்ரேலிய திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டதன் பின்னணி

August 21, 2024
Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

PM CARES: ஒன்றிய அரசின் மற்றுமொரு ஊழல் பெரும் கொள்ளை

March 17, 2026

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் ஆவணங்கள்

February 12, 2026

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026

இனப்படுகொலையை நோக்கி நகரும் இந்தியா

January 12, 2026
Facebook Instagram YouTube WhatsApp
© 2026 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.