1. “அவரை காப்பதற்கான பின்புற சக்தி இருப்பதாக அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்”
2. உங்களுக்கு அச்சுறுத்தல் என கூறி உள்ளீர்கள், ஆனால் ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்பிற்கும் நீங்கள் தான் அச்சுறுத்தலாக மாறி உள்ளீர்கள். நாடு முழுவதும் உள்ள மக்களின் உணர்ச்சிகளை நீங்கள் தூண்டிய விதம் தற்போது நாட்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் நீங்கள் ஒருவர்தான் காரணமாக உள்ளீர்கள். இதற்காக நீங்கள் நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
3. “அவர் எவ்வாறு விவாதத்தை தொடங்கினார் என்பதை அனைவருமே பார்த்தோம். இப்படி பேசுவதெல்லாம் பேசிவிட்டு அவர் தன்னை ஒரு வழக்கறிஞர் என்றுவேறு கூறிக்கொள்கிறார். இது மிகவும் வெட்கக்கேடாக இருக்கிறது. இதற்காக அவர் நாட்டு மக்கள் அனைவரிடமுமே மன்னிப்பு கேட்க வேண்டும்”.
4. “இவரின் தேவையில்லாத பேச்சு ஒட்டுமொத்த நாட்டையுமே தீக்கிறையாக்கிவிட்டது”.
5. “இந்த நிகழ்ச்சியின் நிரலில் உள்ளதை பேசுவதை விட்டு இப்படி பொது இடங்களில் பேச தடை விதிக்கப்பட்டுள்ள விஷயங்களை குறித்து விவாதிக்க நுபுர் ஷர்மாவிற்கும் அந்த தொலைக்காட்சி சேனலுக்கும் என்ன தேவை?”.
6. “விவாதத்தில் தவறான விஷயங்கள் ஏதேனும் கூறப்பட்டிருந்தால் அவர் முதலில் செய்திருக்க வேண்டிய விஷயம் தொலைக்காட்சி தொகுப்பாளரின் மேல் எஃப்.ஐ.ஆர் தான் பதிவு செய்திருக்க வேண்டும்”.
7. ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பதாலேயே தனக்கு பின்புற ஆதரவு இருப்பதாக நினைத்துக் கொண்டு இந்த நாட்டின் எந்த சட்டத்தையும் மதிக்காமல் இப்படி ஒரு அறிக்கையை தெரிவிப்பீர்களா”.
8.நீங்கள் யாருக்கேனும் எதிராக புகார் செய்தால் அவர் உடனடியாக கைது செய்யப்படுகிறார். ஆனால் உங்களை காவல்துறையால் கைது செய்ய முடியவில்லை. இதுவே உங்களது செல்வாக்கை காட்டுகிறது.
9.உங்கள் மீது போடப்பட்ட எஃப் ஐ ஆர் என்ன ஆனது? டெல்லி போலீசார் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பது எங்களுக்கு தெரியாமல் இல்லை.
10. 10. உங்களுடைய வார்த்தைகள் தான் உதய்பூரில் அந்த அப்பாவி தையல்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
தமிழில் : ஹபீப்