குடியுரிமை திருத்த சட்டம், புல்லிபாய் செயலி, ஹிஜாப் தடை போன்ற இஸ்லாமிய சமூகம் மேற்கொண்ட பல அடக்குமுறைகளுக்கு எதிராக தீவிரமாக போராடியவர் அஃப்ரின் பாத்திமா.
வெல்ஃபேர் கட்சியின் மாணவர் பிரிவான ஃபிரட்டனிட்டி மூமென்டின் தேசிய
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னால் மாணவத் தலைவர்.
கடந்த ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு முடித்தார். தற்போது அங்கு ஆராய்ச்சி மாணவியாக பயின்று வருகிறார்.
கல்லூரி வளாகங்களில் தொடர்ந்து அரசின் பல அநீதிகளுக்கெதிராக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்திய மாணவத் தலைவர் அஃப்ரின் பாத்திமா.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து பாஜக-வின் நுபுர் ஷர்மா தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்தை எதிர்த்து உத்திரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் கலவரத்துக்கு வித்திட்டதாக கூறி அஃப்ரின் பாத்திமாவின் தந்தையும், வெல்ஃபேர் கட்சியின் உள்ளூர் தலைவருமான ஜாவித் முஹம்மது கைது செய்யப்பட்டார்.
மேலும் அஃப்ரின் பாத்திமாவின் தாய் மற்றும் சகோதரி ஆகியோரும் அலகாபாத் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
கைதுக்கு மறுநாள் இரவு பிரயாக்ராஜ் மாநகராட்சி அஃப்ரின் பாத்திமாவின் வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என நோட்டீஸ் ஒட்டியது.
மறுநாள் காலை அஃப்ரின் பாத்திமாவின் வீடு புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
அநீதிக்கெதிராக போராடினால் உங்களின் இருப்பிடங்கள் கேள்விக்குறியாக்கப்படும் என்பதே அஃப்ரின் பாத்திமாவின் மூலம் அரசு நமக்கு எடுக்கும் பாடம்.
இது அல்ல உண்மை, ஒற்றை போராட்டக்காரரை பார்த்து ஒட்டுமொத்த பாசிச கூட்டமே அஞ்சுகிறது என்பதே உண்மை.
ரஹ்மத்துல்லாஹ் – எழுத்தாளர்