Close Menu
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கவிதை»அல்லாஹு அக்பர்!
கவிதை

அல்லாஹு அக்பர்!

மௌலவி முஹம்மது ஃபைஜ் ஸலாமிBy மௌலவி முஹம்மது ஃபைஜ் ஸலாமிFebruary 10, 2022Updated:June 6, 2023No Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

கருப்பு முகத்திரையினுல் ஒரு முழக்கம்
காவியின் மதவெறி ஓலங்களை
மண்கவ்விடச் செய்து,
ஆயிரம் ஆண்டுகள் கழித்தும்
மறையாமல் வெல்லும் உயிர்மையானது!

அன்றுமுதல் இன்றுவரை
எழுதப்படும் நீதிப்போராட்டங்களில்
எழுந்திடும் எழுச்சி முழக்கமது!

அமேரிக்காவின் அடிமை எழுச்சியோ!
அரேபியாவின் ஏகத்துவ முதிற்ச்சியோ!
இந்தியாவின் சுதந்திர உணர்ச்சியோ!
பதினைந்து நூற்றாண்டுகளில்
சிந்தப்பட்ட இரத்தத்திலும்
அதனால்,
ஊடுருவப்பட்ட இதயங்களிலும்
வற்றா பேரூற்றின் முழக்கமது!

மண்ணில் மழுங்கிமாயும் மனித
அதிகார வெறுமை,
பாமரர்களின் ஈரற்குலைகளை விழுங்காமல்,
ஆழியின் அடர்த்தி அறிந்தவனின்
வானத்தின் வழியறிந்தவனின்
மகத்தான அதிகாரத்திற்கு முன்
மண்டியிடச் செய்யும் முழக்கமது!

ஒற்றை நீதியை, அநீதத்தின்
பெரும் நிலமொன்றின் வீசினாலும்
அம்மண்முழுதும், ஒற்றை நீதியின்
வேர்களில் சூழந்து,
ஒரு நிலையான பனை மரத்தையே
வளரச்செய்யும்
ஒரு கனமான மழைத்துளியே,
அவ்வீர முழக்கம்!

மதவெறுப்பிற்கு எதிராக!
மத பேதங்களுக்கு எதிராக!
ஒரு பெண்ணின் ஒற்றை விரல்
உயர்வாய் இருக்கட்டும்,
அடிவயிற்றிலிருந்து நெஞ்சுரத்தோடு
எழுப்பப்பட்ட எத்தனையோ ஆஸாதி
முழக்கங்களாக இருக்கட்டும்,
அனைத்தின் பிறப்பிடமாகிவிட்டது அம்முழக்கம்!

உரிமையை உடலில் போர்த்திக்கொண்டதால்
கல்வி மறுக்கப்பட்டவள்,
அவளின் கண்களில் வழிந்தோடும்
ஒரு துளிக்கண்ணீரை,
ஒரு பெரும் கருங்கடலாய் தன் முகத்தில்
அணிந்துக்கொண்டு,
ஒரு கொடுங்கோல் அதிகாரத்திற்கெதிராய்
அவளிலிருந்து எழும் சுனாமியே
அந்த முழக்கமானது..!
“அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப்பெரியவன்)

Modi Government அல்லாஹு அக்பர் கவிதை பாஜக ஹிஜாப்
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
மௌலவி முஹம்மது ஃபைஜ் ஸலாமி
  • Website

Related Posts

காஸாவின் குழந்தை

October 7, 2024

ஆபாசமும் குடும்ப அமைப்பின் சீர்குலைவும்

August 4, 2024

தூஃபான் நாங்கள்

October 13, 2023

ஹிஜாப் பெண்களுக்கான கண்ணியத்தை சேர்க்கிறது

September 22, 2022

கூவத்தூர் to கௌஹாத்தி. ஜனநாயகத்தை கவிழ்க்கும் ரிசார்ட் அரசியல்.

June 25, 2022

பரப்பப்படும் வெறுப்பு அரசியல்

May 21, 2022
Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

சிறையிலிருந்து சீரமைப்பு!

March 25, 2026

PM CARES: ஒன்றிய அரசின் மற்றுமொரு ஊழல் பெரும் கொள்ளை

March 17, 2026

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் ஆவணங்கள்

February 12, 2026

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026
Facebook Instagram YouTube WhatsApp
© 2026 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.