இந்திய ஒன்றியத்தை வடக்கு தெற்கு என்று பிரித்து ஒப்பிடுவது அடையாள அரசியலோடு சுருங்கிவிடுவதல்ல. இந்த எதிரெதிர் முரணுக்கு இடையில் நீண்டகால வரலாற்றுப் போக்குகள் உள்ளது. அவை, பல்வேறு மாறுபட்ட தன்மைகளை தம்முள் கொண்டுள்ளன. இரண்டு எதிர் துருவங்களுக்குப் பின்னணியில் அடிப்படையில் பன்முக கூறுகள் உள்ளன. இந்தியாவில் இந்து-முஸ்லீம் என்ற முரணையும் அவ்வாறுதான் பார்க்க வேண்டும். பொதுவான வரலாறு இஸ்லாமியர்கள் பக்கம் இஸ்லாமிய ஆட்சியாளர்களையும், இந்துக்களின் பக்கம் உயர்சாதி பார்ப்பனர்களையும் ஒப்பிட்டே எழுதப்பட்டுள்ளது. மாறாக, பார்ப்பனர்களால் தீட்டு கடைப்பிடிக்கப்பட்ட மாப்பிளா முஸ்லீம்கள் போன்ற அடித்தள மக்களின் வாழ்வியல் பெரிதும் பேசப்படவில்லை. இஸ்லாமிய ஆட்சியாளர்களை இந்துக்களோடு ஒப்பிட்டு இந்து-முஸ்லீம் முரணை விளக்குவது ஒருவித அரசியல் செயல்பாடு. இதன்மூலம், இஸ்லாமியர்கள் இந்துக்களை அடக்கி ஆண்டார்கள், அதிகாரம் செலுத்தினார்கள், கொடுமைப்படுத்தினார்கள், அவர்கள் உரிமையை தட்டிப்பறித்தார்கள் என்ற பொது உளவியல் இயல்பாகவே இந்துக்கள் மத்தியில் கட்டமைக்கப்படுகிறது. இன்று இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை கூட அது ஏற்புடையதுதான், அதற்கு நமக்கு…
Author: அப்துல்லா. மு
பன்மைத்துவ இன, மொழி, கலாச்சார இந்தியாவில் சினிமாவிற்கென தனித்த பண்புகள் உண்டு. அது, இந்திய அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் பெரிது. காரணம், இங்கு மதத்திற்கு நிகரான வழிபாடாக சினிமா உருவாகியிருக்கிறது. காலனிய காலத்திலிருந்தே சினிமா கலை வடிவம் மட்டுமின்றி எதிர்ப்பு இயக்க பிரச்சாரமாகச் செயல்பட்டு வந்துள்ளது. சிறந்த உதாரணம் என்றால் தமிழில் திராவிட இயக்க சினிமாக்கள். அந்தவகையில், சினிமாவுக்கும் இந்திய அரசியலுக்கும் இணைபிரியா தொடர்புள்ளது. பாஜக அரசு ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய சினிமாவின் போக்கு மாறியது. ஒவ்வொரு நடிகருக்கும் ஓர் அரசியல் உள்ளது. அதை அவர்கள் தேவையான இடங்களில் வெளிப்படுத்தலாம். ஆனால், சினிமா பிரபலங்களின் செல்வாக்கை உணர்ந்த பாஜக அரசு தனது நிலைப்பாட்டிற்குச் சாதகமாக சினிமாவை ஒற்றை திசை போக்கில் நகர்த்தியது. அரசின் கொள்கைகள் சினிமா திரைகளிலும், அரசியல் அழுத்தங்கள் சினிமா பிரபலங்கள் மீதும் திணிக்கப்பட்டன. அதில், முதல் ஆளாக பாஜக அரசின் ஆதரவாளரானார் அமிதாப் பச்சன்.…
நாம் தமிழர் இயக்கம் கலாச்சார அரசியலால் மையம் கொண்டது. தமிழ் மொழியும் தமிழ் இன மேலாண்மையும் அதன் ஆதார வடிவம். எதார்த்த களத்தில் அதன் தர்க்கம் இதனை உள்ளடக்கியே பயணப்படும். தமிழர் அல்லவென்றால் பெரியாரையே புறம் தள்ளுவது, தமிழர் என்றே ஒரே காரணத்திற்காக வைகுண்ட ராஜன், பச்சமுத்து, அன்புச்செழியன் போன்றவர்களை உள்ளிழுத்துப் பரிந்து பேசுவது என்பது அக்கட்சி கடைப்பிடிக்கும் இனவாதத்தின் அறம். அப்படியிருக்கையில் இஸ்லாம், கிறிஸ்துவம், நாத்திகம் போன்ற மதத் தொடர்புடையவற்றையும், பெண்ணியம், இடதுசாரியம், தனிநபர் ஈடுபாடு போன்ற சிந்தனைகளையும், அவை தமிழ் கலாச்சார சூழலில் நேரடி தாக்கம் செலுத்தும்போது அல்லது தமிழியம் என்று சொல்லப்படும் பழமைவாத மதிப்பீடுகளிலிருந்து மாறுபடும்போது அக்கட்சி எவ்வாறு அணுகுகிறது என்பதில் அதன் எதார்த்த முகம் வெளிப்படுகிறது. சாதியின் அடிப்படையில் இன அடையாளத்தை வரையறுப்பது தொடங்கி வரலாற்று இயங்கியலை மறுத்து தமிழ் பழமைவாதங்களை முழுவதுமாக வியந்தோதுவது வரையிலான வெளிப்படையான அக்கட்சியின் குறைபாடுகள் அனைத்தும் பார்ப்பனியத்தால் தூண்டுதல் பெற்றது.…
மனிதக் குல இயக்கத்தில் மாபெரும் பின்னடைவாக மனிதன் தனக்குள்ளாக வகுத்துக்கொண்ட படிநிலைகள் அமைகிறது. இதில் பெரும் அவமானகரமான அதே நேரத்தில் மனிதத்திற்கான அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கியது அடிமை அமைப்புமுறை. நாகரிக சிந்தனை தோன்றிய நாள்முதலே உருப்பெற்ற அடிமை முறையும், நாகரிகங்கள் பல கடந்தும் ஒழியாது மாறா சிந்தனையாகப் பரிணமித்தது. உலகின் முடிவு என்று ஒன்று இருந்து, அதிலிருந்து இவ்வமைப்புமுறையைத் திரும்பிப் பார்த்து இச்சமூகம் உணருமானால், உயிரிகளில் தாங்கள் மேலானவர்களாக இருந்துள்ளோமா என்ற கேள்விக்கு முன் வெட்கி தலைகுனிந்து நிற்கும். அப்படிப்பட்ட நிலையின் போராட்டங்களை உணர நினைவுக்கூறும் தினங்களில் ஒன்றாக அடிமை ஒழிப்பு தினம் உள்ளது. நாகரிக நிலையினால் உருவான தனிச்சொத்துகளை பெருக்கவும், உற்பத்தி முறையைத் தொடர்ந்து நிலைநிறுத்தவும் மனிதன் அடிமையை உருவாக்கினான். கிரேக்கம், ரோம், எகிப்து, பாபிலோன் போன்ற தொன்மையான நாகரிங்ககளின் வளர்ச்சிக்கு அடிமைகளின் உழைப்பே மூலாதாரமாக இருந்தது. இங்கு உழைப்பு என்பது எந்த வரையறைக்கும் உட்படாதது. அதனாலேயே அடிமைகளை ‘பேசும் கருவிகள்’…
‘மனிதன், தானறிந்த தான் கற்பனை செய்து வைத்துள்ள மனித உயிர்கள் அனைத்தையும் வகைமைப்படுத்தவேண்டிய தேவை உள்ளது.அவற்றை எதிரெதிரான இரு குழுக்களாகப் பிரிப்பதன் மூலம் நெகிழ்ச்சியான மக்கள் திரளை அடர்த்தியான பாகுபாட்டுக்குள் மனிதன் கொண்டுவருகிறான். போர்க்களத்தில் அணிவகுத்திருப்பது போல நிறுத்தப்பட்டுள்ள அந்த இரு பிரவுகளிக்கிடையே பகைமை உணர்வு ஊட்டப்படுகிறது.அவன் விருப்பப்படி அந்த இரு குழுக்களும் தமக்குள்ள பகைமை கொண்டிருக்கின்றன. நல்லது கெட்டது என்பது பற்றிய தீர்ப்பு மிகவும் தொன்மையான, பகைமை கொண்ட வகைப்படுத்தலாகும். அந்த இரு பிரிவுகளிடையே எப்போதும் ஒரு முறுகல் நிலை பேணப்படுகிறது. தீர்ப்புகள் வாயிலாக அந்த பகைமை நிலை உருவாக்கப்படுகிறது. அது தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்படுகிறது.’ எலியா கனெட்டி (அதிகாரத்தின் மூலக்கூறுகள்) மனிதன் என்பவன் குழுவின் பிரதிநிதி. தனிமனிதன் என்னும் சிந்தனை ஒரே நிலையில் குழு என்ற தொகுப்பை அடையும்போது, அத்தொகுப்பு தனக்கான எதிர்நிலையை நிர்ணயித்து தனது அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்குமான வாழ்வை உறுதிப்படுத்துகின்றது. கூட்டம் என்பது எண்ணங்களிற்கான திறனை உந்தித்தள்ளுகிறது. அதிலுள்ளவனை…
இந்தியா முழுவதும் பிரிட்டிஷ் ஆதிக்கம் வலிமையாக இருந்த காலம்.கல்கத்தா டெல்லி என வடக்கிலேயே தலைநகரங்களும் ராஜாங்க ரீதியான செயல்பாடுகளும் மையம் கொண்டிருந்தது. 1891ம் ஆண்டு அப்போதைய செங்கல்பட்டு செயல் ஆட்சியாளரால் பிரிட்டிஷ் அரசிற்கு ஒரு கடிதம் எழுதப்படுகிறது.அந்த கடிதம் இரண்டாயிரமாண்டு கால இந்திய சமூகத்தின் மனசாட்சியை கேள்விக் கேட்கக்கூடியதாக அமைந்தது.தெற்க்கே பரிந்துரைக்கப்பட்ட ஒரு சட்டம் மொத்த இந்தியாவையும் ஆச்சரியமடைய செய்தது. வர்ணாசிரம முறையில் நால் வர்ணத்திற்கு வெளியே வைத்து பார்க்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்.உழைக்கும் மக்களான பெரும்பான்மை சமூகத்தினர் கல்வி,இருப்பிடம்,சமூக அந்தஸ்த்து என அனைத்திலும் ஒதுக்கப்பட்டு தீண்டதாகாதவர்களாகவே பார்க்கப்பட்டனர்.இதுப்பற்றி, “அவர்கள் மிக மோசமான ஊட்டச்சத்து பற்றாக்குறையோடே எப்போதும் வாழ்கிறார்கள், எதோ கந்தல் துணியையே உடுத்திக்கொண்டு இருக்கிறார்கள், தொழுநோயோ, பிற மோசமான நோய்களோ அவர்களைத் தின்கிறது, அவர்கள் பன்றிகளைப் போல வேட்டையாடப்படுகிறார்கள், கல்வி மறுக்கப்பட்டு, கவனிப்பாரற்று இருக்கிறார்கள்.இந்த மக்கள் சமூகத்தைப் பரம்பரையாகத் தொடரும் அடிமை முறைகளில் இருந்தும், சட்ட ரீதியான தடைகளில் இருந்தும் ஆங்கிலேய அரசு…
கம்யூனிஸ ஜின்பிங்கும், கோஷம் போடும் தோழர்களும்! மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுர வருகை ஓர் பெரிய வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ஆளும் சார்புடையவர்களும் ஊடகங்களும் இதனை மிகப்பெரிய சாதனையாகச் சித்தரித்து வருகின்றனர். இரண்டு மிகப்பெரிய நாட்டின் தலைவர்கள் சந்திப்பு, அதற்கான காரணம் மற்றும் பொருள் என்பதைத் தாண்டி அதன் மூலம் உருவாக்கப்படும் வெறும் விளம்பரம் என்பது கேள்விக்குள்ளாகாமல் இருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. வழக்கம்போல் பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் #GoBackModi என்ற ஹாஷ்டாக் மூலம் எதிர்ப்பை சந்தித்தது. தனக்கு எதிராகக் கருப்புக் கொடி போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்றே சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று கோவளத்தில் தங்கினார் மோடி. ஆனால், அதே சமயம் ஜி ஜின்பிங் நகரின் நடுவே தங்கி, மாமல்லபுரத்திற்கு காரிலேயே பயணம் மேற்கொண்டார். இங்கும் பலர் சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது என்ற ரீதியில் ஜின்பின்கை வரவேற்றனர். அவர் எப்படிப்பட்டவர் என்ற…
காஷ்மீர் பிரச்சனையும் அமெரிக்காவின் முரண்பாட்டு அரசியலும். உலக நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை எந்தவித நியாயவாதங்களும் இல்லாமல் செய்யும் அமெரிக்கா காஷ்மீர் விவகாரத்தில் ஏனோ ஒருவித தொலைவை கடைப்பிடிக்கிறது. இத்தனைக்கும் காஷ்மீர் பிரச்சனை ஒரு நாட்டின் ஆட்சியாளர்களுக்கிடையே அல்லது அரசிற்கும் மக்களுக்கும் இடையே மட்டும் நடப்பதல்ல. கூடுதலாக ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் இடையே நிகழும் சிக்கலான உரசல். இதனை மையப்படுத்தி இரு நாடுகளுக்கிடையே முதன்மையாக மூன்று போர்கள் நடந்துள்ளது. தொடர்ந்து இருதரப்பினரிடையே ஐக்கிய நாடுகள் சபை வரை சர்வதேச வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில், அமெரிக்கா ஏன் ஆர்வம் காட்டவில்லை? என்ற கேள்வி மூலம் அமெரிக்காவின் அயல்நாட்டுத் தலையீடுகளை அங்கீகரிப்பது என்றில்லாமல், அதன் நிலையின்மீதான காரணங்களைத் தேடுவதே பதிவின் நோக்கம். ஆப்கனில் அமெரிக்காவிற்கும் தாலிபான்களுக்கும் இடையேயான பிரச்சினை முடிவை எட்ட, கடந்த 18 ஆண்டுகளாக அங்கிருந்த அமெரிக்க ராணுவத்தினரைத் திரும்பப் பெற அமெரிக்கா முன்வந்தது. அல்-கொய்தா மற்றும் பிற பாகிஸ்தானியத்…
‘இட ஒதுக்கீடு என்பது தனிநபர் சார்ந்ததல்ல.அது சமூகம் சார்ந்தது.கல்வியிலும் சமூக நிலையிலும் காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு இருக்கும் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை நிலை நாட்டுவது’. பொருளாதார இட ஒதுக்கீடு என்பதற்கான அம்பேத்கரின் பதில் இது. பொருளாதாரம் தனிநபர் சார்ந்தது,நிலையற்றது.எனவே,அதைச் சார்ந்த செயல்பாட்டின் மூலம் அவர்கள் அதனை வெற்றிபெறலாம்.அரசியல் சட்டத்தின் 15(4) மற்றும் 16(4) ஆகிய பிரிவுகளின்படி “சமூக நிலையிலும், கல்வியிலும் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு”என்று தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது.ஆதலால், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்பிற்கும், அடிப்படை சமூக நீதிக்கும் முற்றிலும் முரணானது. மண்டல் கமிஷன் : இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950-ல் ஆண்டு அமல்படுத்தப்பட்டபோது தாழ்த்தப்பட்டவர் மற்றும் மலைவாழ் மக்கள் பட்டியல் அரசிடம் இருந்தது. ஆனால், யாரெல்லாம் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற பட்டியல் அரசிடம் இல்லை. அதற்காக, அம்பேத்கர் ஆலோசனையின்படி பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலையை அடையாளம் காண ஒரு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 340-ல் தெளிவாக்கப்பட்டது.…