ஏணிப்படிகள் – புத்தக அறிமுகம்
நூல் ஆசிரியர் அவர்களை “இதயம் பேசுகிறது” ஆசிரியர் மணியன் அவர்கள் இவரது வாழ்க்கை வரலாறை இவர் சொல்ல சொல்ல, ஏன் இதை தாங்கள் சுயசரிதையாக எழுதக்கூடாது என வினவ அதையே ஒரு கருத்தாக கொண்டு, ஆசிரியர் தனது வேலையால் ஏற்பட்ட வேலை நுட்பம், கணக்குகள், நடைமுறை வேலை, அதன் செயல்பாடு, அதை நாம் எப்படி மேலாண்மை செய்தது, பலநிலை, பல சூழ்நிலை, பதவி உயர்வு, மதிப்பு, பணி மாறுதல், அடிக்கடி நிகழும் வெளியூர் மாற்றம் என பலவற்றை சிக்கலில்லாமல் ஏணிப்படியில் முதற்படியில் இருந்து கடைசி படி வரை தனது உத்தியோக வாழ்வு அதுவும் ஒரு பொறியாளர் எவ்வளவு சுவாரசியமாக எழுதுகிறார் என்பது வியப்பு. நமக்கு கீழே உள்ளவர்கள் சொல்வதையும் கேட்டு, மேலதிகாரிகள் சொல்வதையும் கேட்டு நமது ரசனைக்கு ஏற்ப எப்படி செயல் படுத்தினேன் என்பதை தெளிவுபட விளக்குகிறார். தனது படிப்பைத் தொடர பம்பாய் போக இருப்பதை தனது தந்தை தடுத்தது. தமது 21 வயதில் திருமணம், உடன் சென்னை தலைமை அலுவலகத்தில் கீழ்நிலை ஊழியராக சேர்ந்தது. ஓய்வுபெறும் வயதில் அந்த அலுவலகத்திலேயே தலைமைப் பதவி பெற்றது, ஜீவன் இல்லாத அரசு கடிதம் – மனிதாபிமானம் உணர்ச்சிகளுக்கு அரசாங்க வேலையில் இடமில்லை – எனக்கு முதல் எதிரி கம்யூனிஸ்ட் இரண்டாவது எதிரி பொதுப்பணித்துறை எனக் கூறியது – பொள்ளாச்சி, அவிநாசி, கோவை, ராமநாதபுரம், சென்னை – பல்வேறு இடங்களில் பாலம் – சாலை சாலை வேலை பார்த்தல் – பின்பு செல் டெல்லிக்கு சென்று நூலகம் எப்படி இயங்குகிறது அதை நமது துறையில் எப்படி அந்த நூலக பணியை செம்மைப் படுத்துவது என எண்ணி அதன்படி தானே பொறுப்பு எடுத்துக்கொண்டு செய்து மேலதிகாரியிடம் நன்மதிப்பு பெற்றது டெல்லியில் தங்கிய வீட்டில் நாங்களும் தூங்கவில்லை கொசுவும் தூங்கவில்லை என நகைச்சுவை உணர்வுடன் எழுதியுள்ளார்.
பிறகு டெல்லி சென்று இத்துறை சார்பாக பல வேலைகளை அங்கிருந்தபடி செய்து முடித்து எனவும், பின் அண்ணா நகர் உருவாக்கியதில் தன்னுடைய சேவையை அரசு நிமித்தமாக செய்து நல்ல பெயர் வாங்கியது என பல்வேறு அரசியல் பின்னணியையும் நம்மிடையே ஆசிரியர் ஆங்காங்கே கோடிட்டுக் காட்டுகிறார்.
உண்மையில் நாம் ஏணிப்படிகளாக உயர்வோம் இவர் எழுதிய ஏணிப்படிகள் என்ற நூலினை படித்து.
நூலின் பெயர் : ஏணிப்படிகள்
ஆசிரியர் ஆர் சுப்பிரமணியம் பி.இ.எப்.ஐ.இ
ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் நெடுஞ்சாலை ஊரக பணிகள்
பதிப்பகம் : யசோதா பதிப்பகம்
முதற்பதிப்பு : 2016
விலை : ரூ 175