டெல்லியில் உள்ள இரண்டு ஊடக நிறுவனங்களில் நடைபெற்ற அரசின் சோதனையானது, ஊடக உலகில் மிகுந்த கவலைகளை உருவாக்கியுள்ளதை, இந்திய ஆசிரியர் சங்கம் (Editors Gild pf India) சமீபத்தில் பகிர்ந்து கொண்டது. ஏனென்றால், இது சட்ட நடவடிக்கைகள் என்பதை விட , அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்களை முடக்குவதற்கும் அச்சுருத்துவதற்குமான நடவடிக்கையே ஆகும். நியூஸ் க்ளிக் மற்றும் நியூஸ் லோண்டி ஆகிய இணைய ஊடகங்கள் சமீபத்திய நாட்களில் மாரத்தான் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
நியூஸ் லாண்டரியில் வருமான வரி (ஐடி) அதிகாரிகளின் ‘சர்வே’ (ரெய்டு அல்ல!) நண்பகல் முதல் நள்ளிரவு வரை நீடித்தது. நியூஸ் கிளிக் தலைமை ஆசிரியர் பபீர் புரகயாஷ்டாவின் வீட்டில் 114 மணி நேரம் அமலாக்க இயக்குநரகம் (ED) அதிகாரிகளால் பரிசோதனை நடத்தப்பட்டது. அமலாக்க இயக்குநரகம் (ED) , வருமானவரித்துறை அதிகாரிகளால் இதற்கு முன்பும் மேற்படி நிறுவனத்தில் சோதனைகள் நடைபெற்றுள்ளது. நிதி முறைகேடுகள் குறித்துதான் சோதனைகள் நடைபெற்றது என்று கூறப்படுகிறது. ஆனால் அந்நிறுவனங்கள் குற்றச்சாட்டை மறுக்கின்றன. மேலும் அமலாக்கத்துறையால் சுட்டிக்காட்டப்பட்டபடி, IT Act 135A இன் கீழ் கணக்கெடுப்பு விதிமுறைகளுக்கு அப்பால் பல்வேறு ஆவணங்கள் பார்க்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன..
விசாரணைக்கு உட்பட்ட தரவை மட்டுமே நகலெடுக்க சட்டம் அனுமதித்துள்ள நிலையில், நியூஸ் லாண்டரி இணை நிறுவனர் அபிநந்தன் சேக்ரி உட்பட பலரது தனிப்பட்ட கோப்புகள் மற்றும் மின்னஞ்சல்களை திருடியுள்ளனர். அவரது மடிக்கணினி மற்றும் மொபைல் போனின் முழுமையான நகலையும் எடுத்துள்ளனர். செய்திகளுடன் தொடர்புடைய மூலங்களை குறித்தான தகவல்களையும் தனிப்பட்ட தகவல்களையும் கைப்பற்றியது சட்டவிரோதமானது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இவைகள் ஊடக நிறுவனங்களை முடக்குவதற்கான அரசின் முன்னெடுப்புகளே என ஐயப்பட காரணமாக அமைந்துள்ளது.
2014க்கு பிறகுதான் இவ்வாறான நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. NDTV, கேரவன் மற்றும் தி வயர் உள்ளிட்ட நிறுவனங்களின் மீதான நடவடிக்கைகள் சான்று. இத்தகைய நிறுவனங்கள் மீது தேசத் துரோகத்திலிருந்து நிதி முறைகேடுகள் வரை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. . கேரவன் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் மீது ஐந்து வெவ்வேறு மாநிலங்களில் வழக்குகள் உள்ளன. பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் மட்டுமல்ல, ஆன்லைன் அச்சுறுத்தல்களும் அதிகரித்துள்ளது. கேரவனின் நான்கு பத்திரிகையாளர்களை தாக்கினார்கள்.
கடந்த ஆண்டு இந்தியாவில் 67 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 200 பேர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என ஃப்ரீ ஸ்பீச் கலெக்டிவ் சுட்டிக்காட்டுகிறது. அரசின் ஆளும்கட்சியின் பல்வேறு தோல்விகளை அம்பலப்படுத்திய நேஹா தீக்ஷித், சுப்ரியா சர்மா, ரச்சனா கைரா மற்றும் ராணா அய்யாப் உட்பட பல பெண் பத்திரிகையாளர்கள் மீது சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ராணா அய்யூபின் மீது பொருளாதார வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜம்மு -காஷ்மீரின் நிலைமையை சித்தரித்ததற்காக ஃப்ரீ ஸ்பீச் கலெக்டிவ்வின் கீது சேஷியும் குறிவைக்கப்பட்டுள்ளார். அரசையோ, அரசு சார்பு நபர்களையோ அல்லது அரசு சார்பு கார்ப்பரேட் நிறுவனங்களையோ விமர்சிக்க கூடாது என்ற செய்திதான் இதன் மூலம் தரப்படுகிறது.
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தின் போது பலியான விவசாயியின் மரண காரணமான காவல்துறை சொல்லியது பொய்யானது என சுட்டிக்காட்டிய எட்டு பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற தலித் சிறுமியின் கொலையைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது சித்திக் காப்பன் கைது செய்யப்பட்டார். இது போன்ற ஏராளனமான சம்பவங்கள் உள்ளன.
அதிகாரப்பூர்வமான வேட்டைக்கு இணையாக, ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. கௌரி லங்கேஷ் மற்றும் பலர் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் தாமதம் ஏற்படுவதாக உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆண்டு பிப்ரவரியில், சுதந்திர டிஜிட்டல் மீடியா கூட்டமைப்பான ‘டிஜிபபி’யின் பத்திரிகையாளர்களை தூக்கிலிட வேண்டுமென ஒரு யூடியூப் சேனல் அழைப்பு விடுத்தது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பத்திரிகையாளர்கள் மீதான வன்முறைகள் தண்டனையின்றி போய்விடக்கூடாது என்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 2 ஐ ஒரு சிறப்பு நாளாகக் கொண்டாடுகிறது,. ஆனால் நம் நாட்டில், வன்முறை செய்பவர்களுக்குத்தான் பாதுகாப்பு உள்ளது. மத்திய அமைச்சர் விபச்சாரி என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். பிரஸ் கவுன்சில் பெரும்பாலும் அமைதியாக இருக்கிறது. அரசாங்கத்தின் பொய்களை அம்பலப்படுத்துமாறு சமீபத்தில் அழைப்பு விடுத்த நீதிபதி சந்திரசூட்டை ஊடகங்கள் கேள்வி கேட்கின்றன.
IT வேட்டை மற்றும் ED சோதனைகள்தான் இதற்கான வெகுமதியாக கிடைக்கும் எனில், இந்த சாகசத்திற்கு யார் தயாராக இருப்பார்கள்? கோவிட் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து ட்வீட் செய்ததற்காக கைது செய்யப்பட்ட அந்தமானின் ஜுபைர் அகமதுவை கொல்கத்தா உயர் நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்புதான் விடுவித்தது. குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானியை பாஜக நீக்கும் என்று எழுதிய தவால் படேல் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த செய்தி இன்று உண்மையாகியுள்ளது. தாங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவே நீண்ட காலம் எடுக்கும் இந்நாட்டில், ஒரு பொய் வழக்குகளே கடுமையான தண்டனைதான். அதுதான் அவர்களின் உண்மையான நோக்கமும். இறுதியில், சுதந்திரமும் ஜனநாயகமுமே ஆபத்தில் அகப்படும்.
அப்துர் ரஹ்மான் k. s – எழுத்தாளர்