நபீலா இஸ்லாம், பங்களாதேஷில் இருந்து குடி பெயர்ந்தவர்களின் மகளான இவர் ஜார்ஜியா மாகாண செனட் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் முஸ்லிம் பெண்.
நபிலா இஸ்லாம் (32) இவர் ஜார்ஜியா மாகாண செனட் தேர்தலில் அட்லாண்டா எனும் புறநகர் மாவட்டத்தை பிரநிதிப்பபடுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த அமெரிக்க இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இந்த நபீலா, பங்களாதேஷிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய பங்களாதேஷ் உழைப்பாளர் வர்கத்தை சேர்ந்தவர்களின் மகள்.
“கடும் போட்டி வாய்ந்த இந்த ஆண்டில் நாங்கள் 53 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளோம். எங்களுடைய இந்த வெற்றி அளவானது எங்களின் திறமையான குழு மற்றும் கடினமாக உழைத்த தொண்டர்களாலேயே சாத்திய பட்டுள்ளது. நாங்கள் வலிமையான பிரச்சாரத்தை நடத்தி கடுமையாக போராடினோம். மாநில செனட்டில் தங்களின் குரலாக நான் ஒழிப்பேன் என்று என் மீது நம்பிக்கை வைத்த அனைத்து வாக்காளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.” என்று தனது ரிப்பேர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
குவின்னட் கவுண்டி எனும் பகுதியில் வளர்ந்த நபீலா இஸ்லாம் தன்னை வாழ்நாள் போராளியாகவும், ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் ஜனநாயக காரணிகள் மற்றும் மதிப்புகளை முன்னேற்றுவதற்காக தன்னை அர்ப்பணித்த சமூக வழக்கறிஞராகவும் தன்னை விவரிக்கிறார்.
நபீலா தன்னுடைய பள்ளிப்படிப்பை குவின்னட் கவுண்டி பப்ளிக் ஸ்கூலில் நிறைவு செய்துள்ளார். மேலும் அவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை ஜார்ஜியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் அங்குள்ள பீச்ட்ரீ கார்ணர் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்துக்கொண்டே படித்துள்ளார்.
இவர் 2020ல் குவின்னட் டெமாகரடிக் கட்சியின் மூத்த ஆலோசகராக பணியாற்றியுள்ளங. அப்போதே இவர் அங்கிருந்த வியட்நாமிய, கொரிய மற்றும் லத்தின் அமேரிக்க சமூகங்களின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார். மேலும் உள்ளூரில் இவரது வலுவான அரசியல் செயல்பாடானது ஜனநாயக கட்சி பெருமளவில் வெற்றி பெற்று ஜனாதிபதி ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட உதவியுள்ளது. இவர் அமெரிக்க முஸ்லிம் வாக்காளர்களை கவருவதற்காக எனும் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரின் வரலாறு காணாத முயற்சியின் விளைவாக முக்கிய வாக்கெடுப்பின்போது 60000க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் வாக்காளர்களை சென்று சேர்ந்துள்ளார்.
தொடர்ந்து ஜார்ஜ் பிளாய்ட்டின் கொலைக்குப் பிறகு நாடு முழுவதும் எழுந்த இன வாதத்திற்கு எதிரான மற்றும் நீதிக்கான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது நபீலா அப்போதைய குவின்னட் கவுண்டி கமிஷ்னர் கிரிக்ளன்ட் கார்டனுடன் இனைத்து சார்லஸ் ஹேல் படுகொலை நடந்த இடத்திற்கு சில அடி தொலைவில் இருந்த நாட்டின் கடைசி கூட்டமைப்பு நினைவுச் சின்னத்தை அகற்றக் கோரினார். அவரது தொடர்ச்சியான எதிர்வினையின் விளைவாக அந்த இனவெறி நினைவுச் சின்னம் அகற்றப்பட்டுள்ளது.
நபிலாவுடன், ரூவா ரோமன் (29) எனும் பாலஸ்தீன பெண்ணும் ஜார்ஜியா பிரதிநிதி சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் பெண் எனும் பட்டத்துடன் ஜார்ஜியாவின் பிரதிநிதி சபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழில் – ஹபீப் ரஹ்மான்