Close Menu
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»குறும்பதிவுகள்»கல்வியை வணிகமயமாக்கும் தன்னாட்சி அந்தஸ்து.!
குறும்பதிவுகள்

கல்வியை வணிகமயமாக்கும் தன்னாட்சி அந்தஸ்து.!

AdminBy AdminApril 7, 2018Updated:May 31, 20232,122 Comments2 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

நிதிப் பற்றாக்குறை ,  உள்கட்டமைப்பு,  நிரந்தர பணியிடங்கள் நிரப்பபடாமல் இருப்பது போன்ற அடிப்படை ப்ரச்னைகள் காரணமாக தேசம் முழுவதிலும் செயல்படும் கல்வி நிறுவனங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன என்பதுவே ஆய்வறிக்கைகள், பத்திரிக்கை செய்திகள் அனைத்தும் சொல்லும் பொதுவான செய்தியாக உள்ளது. இந்த சூழலில் 60 கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு(UGC)  அறிவித்திருப்பது அரசின் தோல்வியையும், கல்வித்துறையில் அக்கறையின்மையையும் வெளிப்படுத்துகிறது.

தாராளமயமாக்கல், தன்னாட்சி இவற்றால் கல்வித்துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது, மாறாக தனியார்மயமாக்கம் மூலம் கல்வி வணிகமாக்கப்படவே வழிவகுக்கும். கல்வித்துறையில் தனியார் பெருமுதலாளிகள், வியாபார முதலைகள் கால் பதிப்பதன் மூலமும், பாடத்திட்டங்கள் சந்தையின் தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்படுவதாலும் ஆற்றல்மிகுந்த தொழிலாளிகளே உருவாக்கப்படுவார்கள். நிதர்சனத்தில் அவர்கள் சட்டப்பூர்வமான குழந்தைத் தொழிலாளர்களே .

கல்வி நிறுவனங்ளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது என்பது அரசு நிதி பெறும் கல்வி நிறுவனங்களை வணிகமயமாக்க வழிகோலுவதுடன், உயர்கல்விக்கு நிதி வழங்குவதில் இருந்து அரசு பின்வாங்குவதாகவும் அமையும். பிறகு நிறுவனங்களை நடத்துவதற்கு தன்னாட்சி அமைப்புகள் குறுகிய கால படிப்புகளை துவக்கி பல்கலைக்கழகங்கள் சான்றிதழ் படிப்புகள் நடத்தும் தனியார் நிறுவனங்களாக மாறிவிடும். நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு செலவிடப்படும் தொகை ஏற்கனவே கணிசமாக குறைக்கப்பட்டுவிட்டது. இதனால் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டு கல்வி அனைவருக்குமானதல்ல, பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே என்ற நிலை உருவாகும்.

தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் பெருமுதலாளிகளின் ஆதிக்கத்தால் பல்கலைக்கழகத்தின் பன்முகத்தன்மை வெகுவாக பாதிப்புக்குள்ளாகி, ஜனநாயக சூழல் புதைக்கப்பட்டு தேசத்தின் எதிர்காலம் பல்கலைக்கழகங்களில் இருந்த நிலை மாறி ராஜாக்களும், அவர்களது வாரிசுகளும் தேசத்தை ஆளும் நிலை உருவாக்கப்படும். கல்வி முறைமை வழிவழியாக தலைவர்களை உருவாக்காது, மாறாக ஆளும் வர்க்கத்தினரின் ஆதரவு பெற்ற பெருமுதலாளிகள், வியாபார முதலைகளின் விரல் சொடுக்கில் ஆடும் இயந்திரங்களையே உருவாக்கும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியது தேவையாக உள்ளது. தேசத்தின் அறிவுசார் நிபுணர்கள்  அதற்காக விவாதிக்கவும், தேசத்தின் வளர்ச்சிக்கான கொள்கைகளை வகுக்கவும் குரல் எழுப்ப வேண்டும்.

சையது அசாருதீன்
தேசிய செயலாளர்
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு

Loading

Autonomy status UGC கல்வி
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
Admin
  • Website

Related Posts

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026

Boycott: இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை

September 27, 2025

ஷதியா அபூ கஸ்ஸாலே: ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் உயிர்த்தியாகி

September 10, 2025

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

நாம் ஏன் மத்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும்?

February 22, 2025

Why You Should Study in Central Universities?

February 20, 2025
Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் ஆவணங்கள்

February 12, 2026

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026

இனப்படுகொலையை நோக்கி நகரும் இந்தியா

January 12, 2026

சிறை: பொதுப்புத்தி மீதான ஒரு விசாரணை

January 2, 2026
Facebook Instagram YouTube WhatsApp
© 2026 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.