கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவத் தொடங்கிய 2019 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி ஆர்வத்தை தக்க வைப்பதற்காக தமிழக அரசு மேற்கொண்ட ஒரு நல்ல முயற்சி தான் இந்த கல்வி தொலைக்காட்சி என்பது. இந்த கல்வித் தொலைக்காட்சிக்கு புதிதாக ஒரு C.E.O பதவி கடந்த மே மாதம் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் விண்ணப்பித்த 20 க்கும் மேற்பட்ட நல்ல தரமான கல்வி மற்றும் ஊடகவியல் பின்னனி கொண்டோரிலிருந்து ஏனோ, ஆர்எஸ்எஸ் பின்புறம் கொண்டவரும், சாணக்கியா YOuTube Channel இன் இணை இயக்குனர்களில் ஒருவருமான மணிகண்ட பூபதிக்கு தற்போது அப்பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆளும் திமுக கட்சியினர் தொடங்கி, அதன் தோழமை கட்சியினர் தொட்டு, திமுக அரசு உருவாகுவதற்கும், உருவான அரசின் சாதனைகளை விளக்கிச் செல்வதிலும் பெரும்பங்கு ஆற்றிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களுமே கூட இந்த நியமனத்தை கடுமையாக எதிர்த்த நிலையில், தற்போது இவரது நியமனம் தற்காலிகமாக…
Author: ஃபஹ்ருத்தீன் அலி அஹ்மத். V
ஃபஹ்ருத்தீன் அலி அஹ்மத். V ஊராட்சித் தேர்தலில் தலை துணியை அகற்றக் சொல்லிய பாஜக கட்சியினரின் செயல் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய சூடு தணியும் முன்பு, அதற்கு எதிர்வினையாக தடா ரஹீம் பேசிய “பூணூல் அறுப்பு” குறித்த சர்ச்சைப் பேச்சு பெரும் வாத-பிரதிவிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. உடை தொடர்பாக தொடர்ந்து சில மாதங்களாக ஊடகங்கள் விவாதித்து வருவதும், பொதுமக்கள் மத்தியில் உடை கலாச்சாரம் தொடர்பான கருத்து விவாதங்கள் ஏற்பட்டிருப்பது சமூகரீதியில் அவ்வளவு நல்ல அம்சமாக தெரியவில்லை. பருவநிலை மாற்றத்தை போன்று ஊடகங்கள் அவ்வப்பொழுது ஒவ்வொரு விஷயங்களை சர்ச்சைக்குரியதாக ஆக்கும் போக்கும், அவற்றின் ஊடாக வியாபாரத்தை நடத்திக் கொள்வதுமாக மாத்திரமே இந்த அரசியல் நீடித்துக் கொண்டிருக்கிறது. மாறாக, விவாதிக்கப்படும் விஷயங்கள் ஒரு போதும் தீர்வை நோக்கி நகர்வதில்லை என்பதில்தான் இது சமூகத்தை பாதிக்கும் மனநோயாக – நல்ல அறிகுறியாக தெரியவில்லை என்று கூறினோம். இன்னும் சில நாட்களில், ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற ரீதியில்…
சுதந்திரமடைந்து முக்கால் நூற்றாண்டுகளைக் கண்ட பின்பும், நாம் சுதந்திர மனிதர்களாக தான் இருக்கின்றோம்? என எண்ண வைக்கும் ஏராளமான சம்பவங்களை இந்நாடு குறிப்பாக கடந்த சில பத்தாண்டுகளாகக் கண்டு வருகின்றது. மதம், இனம், மொழி என எந்த அடிப்படையிலும் பாரபட்சமற்ற சுதந்திர – சமத்துவ நாடு ‘இந்திய குடியரசு’ என்பதும், அது இங்குள்ள அனைவருக்குமான சம வாய்ப்பை எல்லா காலங்களிலும் வழங்கும் என்பதும் ஏனோ ஏட்டளவில் மட்டும் தான் என்றாகி விட்டது நடக்கும் பல நிகழ்வுகள் தரும் படிப்பினை! சிறுபான்மையின மக்கள் அதிலும் குறிப்பாக, முஸ்லிம்கள் இன்று அவர்களின் நம்பிக்கைகளுக்காக அல்லது அவர்களின் நம்பிக்கை சார்ந்த செயல்பாடுகளுக்காக விமர்சிக்கப்படுவதெல்லாம் தாண்டி “முஸ்லிம்” என்ற ஒற்றை காரணத்திற்காகவே இன்றைய பாசிச – இந்துத்துவவாதிகள் குறிவைக்கப் படுகின்றனர். சமய நம்பிக்கைகளைத் தாண்டி, ஏதேதோ காரணங்களும், கற்பிதங்களும் – அவை எவ்வளவு அபத்தமானவைகளாக இருந்தாலும், முஸ்லிம்களை அழித்தொழிக்க இன்று பாசிஸ்டுகளால் ஆயுதம் ஆக்கப்படுகின்றன. இறைச்சி விவகாரத்தில்…
பல்வேறு அரசியல் சித்தாந்தங்களைக் கொண்டவர்களை உள்ளடக்கியுள்ள வானவில் கூட்டணியான தமிழ்த்தேசிய அரங்கில், அதிகம் கொடிகட்டிப் பறப்பது திராவிட எதிர்ப்பு பேசும் அணியினர்தான். திராவிட இயக்க அரசியலின் வழியிலேயே தமிழ்த்தேசியம் காணவிரும்புபவர்கள், திராவிட இயக்கத்தை அங்கீகரித்தனர். ஆனால், அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும் என்று சொல்பவர்கள், இடதுசாரிகள் என பல முனைகளிலிருந்து கிளம்பிவந்தவர்கள் தமிழ்த்தேசிய அரங்கில் குழுமியிருந்தாலும், பிரதானமான அணி என்பது திராவிட இயக்கத்தை நிராகரிக்கும் அணியாகவே இருக்கிறது. குறிப்பாக நாம் தமிழர் கட்சி. (இந்தக் கட்டுரையில் அவர்களை நிராகரிப்புவாத தமிழ்த்தேசியர்கள் என்றே அழைக்கவிரும்புகிறேன்). நிராகரிப்புவாதத் தமிழ்த்தேசியர்கள் இன்று ஒரு பெரிய முட்டுச்சந்தில் முட்டிக்கொண்டிருக்கிறார்கள். அது வரலாற்று முட்டுச்சந்து. இன்றைய திமுக, மதிமுக போன்ற கட்சிகளை எதிர்கொள்வதற்காக ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தையுமே நிராகரித்த அந்த ஒருதரப்பு தமிழ்த்தேசியவாதிகள் அந்த முட்டுச்சந்தைவிட்டுவிலகி வரலாற்றின் சரியான பாதையில் பயணிக்கவேண்டும் என்றால் அது சுலபமானது அல்ல. நீட் விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒன்றிய அரசின் நீட் திட்டத்தை எல்லாத்…
இதில், முக்கியமாக கவனிக்க வேண்டியது திராவிட சித்தாந்தத்தில் சமூக நீதிக் கோட்பாடு மிக முக்கியமானது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாப்பது திராவிட தேசியத்தின் மிக முக்கியமான அம்சம். ஒரு காலகட்டத்தில் திராவிட தேசியத்திற்கான தேவை இருந்தது. அந்த காலகட்டத்தில் நாம் இருந்திருந்தால் அதைதான் பேசியிருப்போம். அந்த காலகட்டத்தில் தமிழ்த் தேசியம் பேசுவதற்கான சூழல் இல்லை. ஆனால், தற்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவேதான் மொழி அடிப்படையிலான தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடிக்கிறோம். ஆக, திராவிட தேசியம் என்ற களத்தில் இருந்துதான் தமிழ் தேசியம் என்ற அரசியல் உருவாகியிருக்கிறது. மெட்ராஸ் மாகாணத்திலிருந்துதான் தமிழ்நாடு உருவாகியிருக்கிறது. ஆகவே, திராவிட தேசியத்தை பகையாக நிறுத்தி, தமிழ் தேசியத்தை அடைய முடியாது. இந்திய தேசியத்தை முதன்மை பகையாக நிறுத்தி, இந்து தேசியத்தை பகையாக நிறுத்தி போராடுவதில்தான் தமிழ் தேசியத்தைக் கட்டமைக்க முடியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்கள் தமிழ்த்தேசிய இயக்கங்கள்,…
ஆ. ம.பொ.சி வழிவந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்வைக்கும் தமிழ்த் தேசியம் ம.பொ.சி எனப்பட்ட ம.பொ. சிவஞானம் இங்குள்ள மொழிச் சிறுபான்மையரை வெளியே நிறுத்தி Exclusive Nationalism ஒன்றை முன்வைத்தார். பதிலாக அவர் பார்ப்பனர்களை உள்ளடக்கினார். இந்து என்கிற அடையாளத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். 1946ல், இந்திய விடுதலை போராட்டம் இறுதி கட்டத்தை அடைந்துவிட்ட நிலையில், ம. பொ. சிவஞானம் அவர்கள் தொடங்கிய இலக்கிய அமைப்பான தமிழரசுக் கழகத்தில் உருவான தத்துவம் தான் தமிழ் தேசியம். 1946 முதல் 1954 வரை காங்கிரசு கட்சிக்குள் கலை, இலக்கிய, கலாச்சார இயக்கமாக இயங்கி வந்த தமிழரசுக் கழகம், 1954ல் (தமிழரசுக் கழகத்தை கலைக்க காங்கிரசு உத்தரவிட்டதால்) தனி அரசியல் இயக்கமானது. அந்த காலகட்டங்களில் வடவர்கள், இந்தியாவை ஒன்றிணைத்திட இந்தி வழிவகிக்கும் என்ற காந்தியின் கூற்றின் படி, இந்தியை இந்தியாவின் மொழியாக முன்னிறுத்த முயன்று கொண்டிருந்தனர். சாதி சமய வேறுபாடு, தீண்டாமைக்கெதிராக போராடிக்கொண்டிருந்த தென்னவர்களோ,…
ஆ. ம.பொ.சி வழிவந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்வைக்கும் தமிழ்த் தேசியம் ம.பொ.சி எனப்பட்ட ம.பொ. சிவஞானம் இங்குள்ள மொழிச் சிறுபான்மையரை வெளியே நிறுத்தி Exclusive Nationalism ஒன்றை முன்வைத்தார். பதிலாக அவர் பார்ப்பனர்களை உள்ளடக்கினார். இந்து என்கிற அடையாளத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். 1946ல், இந்திய விடுதலை போராட்டம் இறுதி கட்டத்தை அடைந்துவிட்ட நிலையில், ம. பொ. சிவஞானம் அவர்கள் தொடங்கிய இலக்கிய அமைப்பான தமிழரசுக் கழகத்தில் உருவான தத்துவம் தான் தமிழ் தேசியம். 1946 முதல் 1954 வரை காங்கிரசு கட்சிக்குள் கலை, இலக்கிய, கலாச்சார இயக்கமாக இயங்கி வந்த தமிழரசுக் கழகம், 1954ல் (தமிழரசுக் கழகத்தை கலைக்க காங்கிரசு உத்தரவிட்டதால்) தனி அரசியல் இயக்கமானது. அந்த காலகட்டங்களில் வடவர்கள், இந்தியாவை ஒன்றிணைத்திட இந்தி வழிவகிக்கும் என்ற காந்தியின் கூற்றின் படி, இந்தியை இந்தியாவின் மொழியாக முன்னிறுத்த முயன்று கொண்டிருந்தனர். சாதி சமய வேறுபாடு, தீண்டாமைக்கெதிராக போராடிக்கொண்டிருந்த தென்னவர்களோ,…
தனித்தமிழ் வேர்கள் பண்பாட்டுத் தளத்தில் தனித்தமிழ் இயக்கமும், அரசியல் தளத்தில் திராவிட இயக்கமும் கைகோத்துக்கொண்டுதான் பயணித்திருக்கின்றன. இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் அனைவரும் தனித்தமிழ் இயக்கத்திலிருந்து கிளைத்தவர்களே. பெருஞ்சித்திரனாரின் முதன்மை மாணவர்களில் ஒருவரான மு.தமிழ்க்குடிமகன், திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ளத் தயங்கவில்லை. பின்பு அதிமுகவிலும். ஆனால், ‘திராவிட இயக்கத் தமிழர் பேரவை’யைத் தொடங்கி நடத்திவரும் சுப.வீரபாண்டியன் இன்று தேர்தல் அரசியலில் கரைந்துவிடாமலும் அதேநேரத்தில் இடைவெளி அதிகமாகிவிடாமலும் மாறுபட்ட ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடித்துவருகிறார். அழுத்தக் குழுக்கள் என்ற நிலையில், தமிழ்த் தேசிய அமைப்புகளுக்குத் தவிர்க்கவியலாத இடமுண்டு. ஆனால், அரசியல் கட்சிகளாக அவை வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு என்பது தற்போதைக்கு இல்லவே இல்லை. இந்த எதார்த்த உண்மையை உணர்ந்ததன் விளைவாகத்தான் கல்யாணசுந்தரமும் ராஜீவ்காந்தியும் தங்களது அன்புக்குரிய அண்ணன் சீமானை விட்டுவிட்டு, திராவிடக் கட்சிகளில் சேர்ந்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியம் பேசும் இவர்களுக்கு திமுக, அதிமுக என்று எந்தக் கட்சியில் சேர்ந்துகொள்வதிலும் தயக்கங்கள் இல்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. கடைசியில்,…
பாகிஸ்தானுக்கு ஓட்டமெடுப்பவர்கள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கடைசி பந்து வீசப்படும் வரை எந்த ஆட்டமும் முடிந்து விட்டதாக கருத முடியாது என்று சொல்வார்கள். எதிர்பாராத கடைசி நேர ஆச்சரியங்களைத் தரும் விளையாட்டாக (Game of Glorious Uncertainties) கிரிக்கெட் வர்ணிக்கப்படுகிறது. புதிய இந்தியாவைப் பொறுத்த மட்டிலும் கடைசி பந்து வீசப்பட்ட பிறகு தான் இங்கு ஆட்டமே தொடங்குகிறது. ஆட்டம் மொக்கையாக இருந்தாலும் திடுக்கிடும் திருப்பங்களும் சுவாரஸ்யமான சம்பவங்களும் ஆட்டம் முடிந்த பிறகு தான் அரங்கேறுகின்றன. அதுவும் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டமென்றால் கேட்கவே வேண்டாம். வெறுப்பு விளையாட்டு பாகிஸ்தானிலும் கன ஜோராக களைகட்டிவிடும். அங்கிருந்தே இதை கட்டுடைக்க ஆரம்பிக்கலாம். சமீபத்தில் துபையில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றவுடன் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத், “இது இஸ்லாத்தின் வெற்றி” என்று மார்தட்டிக் கொண்டார். கிரிக்கெட் போட்டியின்…
ஆத்திக – நாத்திகத் தமிழ்த் தேசியங்கள் நீதிக் கட்சியினருடன் இவர்களுக்கு மத துவேஷ விஷயத்தில் மோதல் வருகிறது. சைவ சித்தாந்த நிறுவனர்கள் நாட்டார் மதங்களை, நம்பிக்கைகளை மூடநம்பிக்கைகளாகப் பழித்துச் சாடினர். ஆனால் பெரியாரோ சைவ மதத் தொன்மங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றையே எள்ளி நகையாடினார். இரு தரப்பினரிடையிலான மோதலில் நீதிக் கட்சியினரையே வென்று நீடித்தனர். தமிழகம் நாத்திகத் தமிழ்த் தேசியம் நோக்கி நடை போட்டது. பிராமணர்களை எதிர்ப்பது, சூத்திரர்களின் அரசியல் களத்தைத் தயாரித்து அவர்களை ஒன்றிணைப்பது, அடித்தட்டினரின் சமய நம்பிக்கைகளைச் சாடுவது (கல் எப்படிடா கடவுள் ஆகும் மூடனே!) ஆகிய பொதுவான சரடுகள் திராவிடர் கழகம், அதன் தொடர்ச்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் வருகையுடன் தொடர்ந்தன. குறிப்பாக இந்தப் பெயர்வுடன் வெள்ளாள சாதியினரிடமிருந்து பிற மத்திய சாதியினரின் கைக்குத் தமிழ்த் தேசியம் சென்றது. தனித்தமிழ் வேர்கள் பண்பாட்டுத் தளத்தில் தனித்தமிழ் இயக்கமும் அரசியல் தளத்தில் திராவிட இயக்கமும் கைகோத்துக்கொண்டுதான் பயணித்திருக்கின்றன. இன்று…