குடியுரிமைப் பதிவேடும் மக்கள் தொகைப் பதிவேடும் ஒண்ணு! இதை அறியாதோர் வாயில மண்ணு!
(குடியுரிமைப் பதிவேடு வேலை தொடங்கிவிட்டது. என்ன நடந்துகொண்டுள்ளது என்பதைச் சரியாகப் புரிந்துகொள்வோம்)
இப்போது NRC யுடன் எவ்வாறு NPR பிணைந்துள்ளது எனப்பார்க்கலாம்.
NPRன் சட்ட அடிப்படை என்பது 1955ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் அமைகிறது. வாஜ்பேயீ தலைமையில் முதல்முறை பா.ஜ.க கூட்டணி அரசு அதிகாரத்தில் இருந்தபோது இது தொடர்பான வகையினங்களில் (category) “சட்டவிரோதமாக இடம் பெயர்ந்தவர்” அல்லது “சட்டவிரோதக் குடியேறி” (illegal migrant) எனும் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டது. இந்தத் திருத்தத்தைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டன, அப்போது நாம் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது இந்திய மக்களின் குடியுரிமைத் தகுதி தொடர்பான மிகப்பெரிய அணுகுமுறை மாற்றம் ஒன்றை உருவாக்கும் திட்டம் என்பதை யாரும் யோசிக்கவில்லை.
“இந்தியாவிலும் வெளியிலும் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் பதிவேடு” ஒன்றைத் தயாரிக்கும் முயற்சிக்கான அடித்தளம் என்பதோடு இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடையாளத்தை மாற்றி அமைக்கும் ஒரு சதி முயற்சி இது “தேசியக் குடிமக்கள் பட்டியலைத் தயாரிப்பதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் வசிக்கும் ஒவ்வொரு குடும்பம் மற்றும் தனிநபர்களின் குறிப்பான தனி விவரங்கள் ஆகியவற்றையும் கணக்கெடுத்துப் பதியப்படும். இதில் அவர்களின் குடியுரிமை நிலையும் உள்ளடக்கப்படும்” – என அவ்வரைவில் கூறப்பட்டதையும் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு போலவே இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் இது மேற்கொள்ளப்படும் எனவும் அதில் கூறப்பட்டது.
இந்தக் குடிமக்கள் பட்டியல் தேசிய அளவிலும், மாநில அளவிலும், மாவட்ட, வட்ட, உள்ளூர் அளவிலும் உட்பிரிவுகளுடன் அமையும். தேசிய அளவிலான பதிவேட்டிலிருந்து இந்த உள்ளூர் அளவிலான பதிவேடு தயாரிக்கும்போது ஒரு ‘சரிபார்க்கும் நடைமுறை’’(verification process) கடைபிடிக்கப்படும். அப்போது “ஐயத்திற்குரிய குடியுரிமைகள்” (doubtful citizenship) அடையாளம் காணப்பட்டு அவை தனிவகையாகப் பதியப்படும். தேசிய குடிமக்கள் பட்டியலின் இறுதி வடிவம் தயாரிக்கப்படும்போது இவ்வாறு ஐயத்திற்குரிய குடிமக்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் தாம் இந்தியர்கள்தான் என நிறுவுமாறு கோரப்படுவார்கள்.”
இங்கே குறிப்பிடப்பட்ட இந்த “மக்கள் தொகைப் பதிவேடு” வேறொன்றும் அல்ல. இப்போது சொல்லப்படும் “தேசிய மக்கள் தொகைப் பதிவேடு”தான் (National Population Register- NPR). இன்று 2019 ஜூலை 31 அன்று மோடி அரசு அஸ்சாம் தவிர பிற அனைத்து மாநிலங்களிலும் இப்படியான ‘மக்கள்தொகைப் பதிவேடு’ ஒன்றைஒன்று தயாரிக்கப்படும்.த் தயாரிக்க ஆணை இட்டுள்ளது.
மொத்தத்தில் என்ன நடக்கிறது? முதலில் ‘சென்சஸ்’ உடன் சேர்ந்து இங்கு தங்கியுள்ளமக்களின் “தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR)” ஒன்று தயாரிக்கப்படும். பின் இந்தப் பதிவேட்டின் அடிப்படையில் “தேசியக் குடிமக்கள் பதிவேடு (NCR)” தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் “சந்தேகத்துக்குரிய குடிமக்கள்” அடையாளம் காணப்படுவர். ஆக இந்த NPR என்பது மோடி அரசு பசப்புவதுபோல வெறுமனே மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் பகுதியல்ல. மாறாக இதுவே “தேசியக் குடியுரிமைப் பதிவேட்டின் (NCR)” முன்னோடி. இது பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் வெறும் ‘சென்சஸ்” எடுக்கும் வேலைதான் என நம் காதுகளில் பூவைச் சொருகிக் கொண்டே ‘சென்சஸ்’ நடவடிக்கையோடு சேர்த்து குடியுரிமைப் பட்டியலும் தயாரிக்கப்படுகிறது.
மம்தா பேனர்ஜி இதைச் சரியாகவே அடையாளம் கண்டு இன்று அந்தப் பணிக்கு ஒரு ஆப்[பு வைத்துள்ளார். தனது மாநிலத்தில் அந்பப் பணியை தொடரக்கூடாது என நிறுத்தி ஆணையிட்டுள்ளார். வேண்டுமானால் என் அமைச்சரவையைக் கலைத்துப் பார் எனச் சவாலும் விடுத்துள்ளார்.
(குடியுரிமை இல்லாதவர்களாக அடையாளம் காணப்பட்ட ஒரு பெண் இவர். பெயர் ஷெஃபாலி ஹெஜாங். குடியுரிமை இல்லாதவர்களை அடைப்பதற்காகக் கட்டப்படும் ஒரு முகாம் கட்டும் பணியில் கூலியாளாக உள்ளார். கட்டி முடிக்கப்பட்டவுடன் அவரே இதில் அடைக்கவும் படலாம்)
(தொடரும்)
அ.மார்க்ஸ்- எழுத்தாளர்