• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கட்டுரைகள்»கடந்த ஐந்தாண்டு பாஜக அரசின் சாதனைகள்!
கட்டுரைகள்

கடந்த ஐந்தாண்டு பாஜக அரசின் சாதனைகள்!

AdminBy AdminMarch 20, 2019Updated:May 30, 20231,984 Comments3 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

– தேர்தல் கமிசன், நீதிமன்றம், உளவுத்துறை உட்பட அனைத்து தன்னாட்சி நிறுவனங்களும் காவிமயப்படுத்தப்பட்டன

– உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியே, ஊடகத்தினர் முன்னிலையில் தோன்றி ஜனநாயகம் சாகடிக்கப்படுகிறது என கூறிய வரலாற்றில் நிகழாத கேவலம் அரங்கேறியது

– ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஒத்துவராத அதிகாரிகளைக் கட்டாய விடுப்பு அல்லது ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்

– கல்புர்கி, தபோல்கர், கௌரி லங்கேஷ் என ஃபாசிசத்துக்கு எதிராக தீவிரமாக களமாடிய எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்

– மாட்டின் பெயரால் நூற்றுக்கணக்கான படுகொலைகள் செய்யப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் இது 95 சதவீதம் அதிகரித்தது.

– ஜி எஸ் டி பெயரால் சிறு, குறு தொழில்கள் மொத்தமாக நசுக்கப்பட்டன

– ரிசர்வ் வங்கி டம்மியாக்கப்பட்டு நடத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம், நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் நடுத்தெருவில் வரிசையில் நின்று பலியாகினர்.

– அம்பானியின் சொத்துமதிப்பு பல மடங்கு உயர்ந்தது

– இராணுவத்தின் பாதுகாப்பையே கேலிசெய்து, 42 இராணுவத்தினர் பலி கொடுக்கப்பட்டனர்

– ஆளில்லாத இடத்தில் குண்டுவீசி வந்து, இராணுவத்தின் பிணத்தைக் கொண்டு ஓட்டு கேட்டனர்

– நாட்டின் முக்கிய வரலாற்று சின்னங்கள், நகரம், வீதி பெயர்கள் மாற்றி காவியடிக்கப்பட்டது.

– நாடறிந்த அறிவுஜீவிகளான ஆனந்த் டெல்தும்டே, சுதா பரத்வாஜ் முதலானோர் மீது தேச துரோகச் சட்டங்கள் பாய்ச்சப்பட்டது

– மோடியின் அரசியல் முன்னேற்றத்துக்காக திட்டமிட்டு பல போலி என்கவுண்டர்களைச் செய்த ஐ பி எஸ் அதிகாரி வன்சாராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட அதேவேளை, குஜராத் கலவரம் தொடர்பாக மோடியினைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த ஐ பி எஸ் அதிகாரி சஞ்சய் பட் மீது பைசா மதிப்பற்ற வழக்கு பதிவு செய்து ஜாமீன்கூட வழங்காமல் சிறையினுள்ளே பேசவிடாமல் முடக்கி வைத்துள்ளது.

– வன்சாராவுடன் இணைந்து குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தபோது நடத்திய சொக்ராபுதீன் ஷேக் முதலான போலி என்கவுண்டர் வழக்குகளில் அமித்ஷாவுக்குச் சாதகமாக நீதி வளைக்கப்பட்டது. நேர்மையாக விசாரணை நடத்தி வந்த நீதிபதி லோயாவே மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அம்மரணம் தொடர்பான விசாரணைகூட சரியாக நடத்தவிடாமல் உச்ச நீதிமன்றத்திலேயே விளையாடினர்

– மாலேகான், சம்ஜௌதா எக்ஸ்ப்ரஸ், ஹைதராபாத் முதலான குண்டுவெடிப்புகளை ஆர்.எஸ்.எஸ் கட்டளையின்படி செய்தேன் என நீதிபதியின் முன்னிலையிலேயே வாக்குமூலம் பதிவு செய்த அசிமானந்தா, ப்ரக்யாசிங் தாக்கூர் முதலான பயங்கரவாதிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

– கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவைத் தீயிட்டு கொளுத்தியதாகவும் 100 க்கு மேற்பட்ட பெண்களைக் கதறக் கதற வன்புணர்ந்ததாகவும் ஜாலியாக தெஹல்காவிடம் பேட்டி கொடுத்த, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பயங்கரவாதி பாபு பஜ்ரங்கி, மாயா கோட்னானி போன்றோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

– வியாபம் மருத்துவத்துறை சார்ந்த ஊழலில் 40 க்கு மேற்பட்டோர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்

– காங்கிரஸ் ஆட்சியில் குறைந்த விலைக்கு ஒப்பந்தம் போடப்பட்ட ரஃபேல் இராணுவ விமான ஒப்பந்தத்தை இல்லாத அம்பானியின் கம்பெனிக்குத் தாரை வார்த்ததோடு, நாட்டுக்கு விரோதமாக பலகோடி ரூபாய் நஷ்டத்தில் அதிக விலைக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், ரஃபேல் ஆவணங்களே திருடு போய்விட்டதாக கூசாமல் உச்ச நீதிமன்றத்தில் பொய்க் கூறப்பட்டது.

– தமிழனின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மாட்டின் பெயரால் தடைபோட்டதுடன், அதை எதிர்த்து மெரினாவில் போராடிய தமிழர்களுக்கு எதிராக தமிழக எடுபிடி அரசைக் கொண்டு அடக்குமுறை ஏவிவிடப்பட்டது.

– கூடங்குளம் அணுமின் நிலையம், நான்குவழிச்சாலை, மீத்தேன் திட்டம் என தமிழர்களின் வளங்கள் அத்தனையையும் திட்டமிட்டே சூறையாடுவது தொடர்கிறது

– தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவில்லை என்பதால், மார்வாடிகள் உட்பட லட்சக்கணக்கான வடநாட்டவர்கள் தமிழகத்தில் வசிப்பதற்கான வாக்காளர் அடையாள அட்டை சட்ட விரோதமாக வழங்கப்பட்டு தமிழகத்தில் குடியமர்த்தப்பட்டனர். தமிழர்களின் தொழில்கள் அத்தனையும் மார்வாடிகளைக் கொண்டு சூறையாடப்பட்டது. அரசு வேலைவாய்ப்புகளில் 95 சதவீதம் வடநாட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

– ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 13 அப்பாவி தமிழர்கள் துடிக்கத் துடிக்க மோடியின் ஏவலாள் படையால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர். எங்களுக்கு எதிராக போராடினால் இதுதான் கதி என மக்களுக்கு மறைமுக செய்தி கொடுக்கப்பட்டது. டெல்லி பல்கலை கழக மாணவர் நஜீப் காணாமலாக்கப்பட்டது போல், ஸ்டெர்லைட் படுகொலை பின்னணியினைத் தோண்டிய முகிலன் காணாமலாக்கப்பட்டார்.

இன்னும் எத்தனை எத்தனை ஊழல்கள், படுகொலைகள், கொள்ளைகள், கலவரங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள்!

இப்போது நடக்க இருக்கும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் என்பது,

இத்தகைய இந்திய ஜனநாயகத்துக்கு எதிரான தேசவிரோத, இனப்படுகொலை, மதவெறி, ஊழல் பயங்கரவாத ஃபாசிச பாஜக அரசிடமிருந்து இந்தியாவைப் பாதுகாப்பதற்கான தேர்தல் என்பதில் மட்டும் மிகத் தெளிவாக இருப்போம்.

 

#GetOutFacistBJP

#GetOutSadistMODI

#VoteForINDIA

 

எழுதியவர்

அப்துர் ரஹ்மான

வெல்பேர் கட்சி

Loading

Share. Facebook Twitter Telegram WhatsApp Email
Admin
  • Website

Related Posts

தனி அடையாளத்தை கெடுக்கும் செல்ஃபி கலாச்சாரம்

November 4, 2025

விளையாட்டு அடிமைத்தனம்

October 15, 2025

வி.எஸ். நைபாலும் இஸ்லாமிய வெறுப்பு பயணங்களும்

October 4, 2025

நபிகள் நாயகம் ஒரு மகான்

September 6, 2025

சாதியப் பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெற காரணங்களும் தீர்வும்

August 27, 2025

சூப்பர் மேன் திரைப்படம் பேசுபொருளானது ஏன்?

July 26, 2025

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

தனி அடையாளத்தை கெடுக்கும் செல்ஃபி கலாச்சாரம்

November 4, 2025

விளையாட்டு அடிமைத்தனம்

October 15, 2025

வி.எஸ். நைபாலும் இஸ்லாமிய வெறுப்பு பயணங்களும்

October 4, 2025

Boycott: இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை

September 27, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.