அரசியல் என்பது சமூகங்களின் இயங்கியலோடு தொடர்புடைய அன்றாட நடைமுறை. சமூகக் குழுக்கள் வளங்களைத் தங்களுக்குள் நியாயமாக பங்கிட்டுக் கொள்ள மேற்கொள்ளும் இடையறாத செயல்பாடுகளே அரசியலாகிறது. நிறுவனப்படுத்தப்பட்ட அமைவனங்களின் மூலம் மக்கள் குழுக்கள் தங்களின் வேறுபாடுகளை சரிசெய்து கொள்ளும் முனைப்பே அரசியல் வடிவம் என்கிறார் அரசியல் கோட்பாட்டாளர் பெர்னார்ட் கிரிக். சமூகங்களுக்கிடையில் உள்ளும் புறமுமாக எழுச்சி பெறும் கூட்டு முயற்சிகள், உடன்பாடுகள் மற்றும் முரண்பாடுகள் உள்ளிட்டவையே அரசியல் என்பார் செயல்பாட்டாளர் அத்ரியன் லெப்ட்விட்ச். எனவே மக்கள் குழுக்களின் முடிவெடுக்கும் முறைமையே அரசியல் என்றாகிறது. சமூகக் குழுக்களின் அபிலாஷைகளுக்கும் உராய்வுகளுக்கும் ஊடாக நடக்கும் இந்த அரசியல், குறிப்பிட்ட இன, மத, நிற, பாலின, வர்க்க அடையாளத்தை முன்னிறுத்தி நடந்தால் அது அடையாள அரசியல் எனப்படுகிறது. இந்த சொல்லாடல் 1977 ஆம் ஆண்டு Combahee River Collective என்ற கருப்பின பெண்கள் குழுவினரால் புழக்கத்துக்கு வந்தது. 80களில் பல்வேறு குழுக்கள் தங்கள் அடையாளங்களை முன்வைத்து தங்களுக்கான அரசியலை…
Author: கோட்டை கலீம்
சமூக விரோதிகளை அடையாளம் காண்பதற்கு குற்றவியல் மற்றும் தடயவியல் துறைகளில் பல்வேறு அணுகுமுறைகள், கோட்பாடுகள், செயல்பாட்டு உத்திகள், தொழில் நுட்பங்கள் உள்ளன. ஆனால் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான டெல்லி பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தில் கூலிப்படைகள் ஊடுருவி கலவரங்களை நடத்தியவுடன், இந்திய பிரதமர் “சமூக விரோதிகளை அவர்களின் ஆடையைக் கொண்டே அறிந்து கொள்ள முடியும்” என்று சொன்னதுதான் தாமதம். எல்லோரும் முன்பு நாம் குறிப்பிட்ட அறிவியல் தொழில்நுட்ப வழிமுறைகளைத் தள்ளிவைத்துவிட்டு அடையாளங்களைக் கொண்டே எளிதாக குற்றவாளி முத்திரைக் குத்த ஆரம்பித்தனர். கொஞ்சம் நாட்களுக்குள் நீதியரசர்களும் இந்த பாராபட்ச கண்ணாடியை அணிந்து கொள்ளத் தொடங்கி விட்டனர். ஷாஹின் பாக் போரட்டக் குழுவினர் மீது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அடிப்படை உரிமைக்காக போராடும் முழுமுதல் உரிமைகளெல்லாம் சிஏஏ போராட்டக்காரர்களுக்கு இல்லை என்றது நீதிமன்றம். அதே நீதிமன்றம் விவசாயிகள் போராடுவதற்கு எல்லா உரிமைகளும் உண்டு, அரசியல் சாசனம் வழங்கிய போராட்ட…
கோட்டை கலீம் – எழுத்தாளர் உலக வரலாற்றில் போர்க்களங்களுக்கு அடுத்து நீதிமன்ற வளாகங்களில்தான்மாபெரும் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. – அபுல் கலாம் ஆசாத் ஹிஜாப் விவகாரம் எதிர்பார்ப்பின் படியே முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய நியாயத்தராசின் முள் முஸ்லிம்களின் விலாவின் பக்கம் சரிந்துவிட்டது. விலாநோக சிரிக்க வைப்பதாகத்தான் கேள்விபட்டிருப்போம். இந்திய நீதி அமைப்புகள் தமது நாட்டின் முஸ்லிம் குடிகளை விலாநோக அழவைப்பதற்கு சளைக்காமல் உழைக்கின்றன. ஏகபோக உரிமையை நிலைநாட்ட ஒன்றிய அரசு ஒற்றை வரிகளை விதித்து தன் கோரமுகத்தைக் காட்டுகிறது என்றால், ஒற்றை கலாச்சாரத்தில் தோய்த்தெடுத்த வரிகளை அவ்வப்போது அள்ளிவீசி அழகாக முடிச்சவிழ்க்கும் தன் கரிமுகத்தைக் காட்ட நீதிமன்றங்கள் தவறுவதில்லை. அரசு அமைவனங்களுக்கு உண்மையில் முஸ்லிம் பெண்கள் மீது அக்கறை இருக்குமானால், அவர்களுடைய கல்வி, கேள்வி, பொருளாதார சுதந்திரம் ஆகியவை குறித்து இஸ்லாம் அளித்துள்ள உரிமைகளை – அவற்றிற்கு எதிராக இருக்கும் சமுதாய சூழலை விவாதப் பொருள்…
பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை வல்லுனரான டாக்டர் பர்ஹான் ஜாவித் 2015 ஆம் ஆண்டு “தப்லீக் ஜமாஅத்தும் தீவிரவாத தொடர்புகளும்” என்ற தலைப்பில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையை மேற்கோள் காட்டி ‘தப்லீக் ஜமாஅத்தின் மறுபக்கம்’ என்று 2.4.2020 அன்று எஸ். குருமூர்த்தி ஒரு வெறுப்பு கட்டுரையை இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதியிருந்தார். இப்போது “சமூகத்திற்கான அச்சுறுத்தல்” என்ற காரணங் காட்டி தப்லீக் ஜமாஅத்தை தடைசெய்திருக்கும் சவுதியை சாட்சியாக்கி தப்லீக் இயக்கத்தினர் மீது வன்மப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்ட மாரிதாஸை வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம். அதே அடிச்சுவட்டைப் பின்பற்றி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக குமார், சவுதியைப் பின தொடர்ந்து இந்தியாவிலும் “திவிரவாதத்தின் உற்பத்தி மையமா”க விளங்கும் தப்லீக் ஜமாஅத்தை தடை செய்ய வேண்டும் என்று அறிக்கை விடுத்திருக்கிறார். இதில் டாக்டர் பர்ஹானின் கருத்துக்கு ஏராளமான எதிர்வாதங்கள், மறுப்புகள் இணையத்திலேயே குவிந்து கிடக்கின்றன. ஆனால் குருமூர்த்திகளுக்கோ மாரிதாசர்களுக்கோ, அர்னாபுகளுக்கோ இது பற்றியெல்லாம்…
திரிணாமுல் காங்கிரஸின் துணைத்தலைவரும் மேனாள் பாஜகவின் தலைவர்களுள் ஒருவரும் ஒன்றிய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா மூன்று தினங்களுக்கு முன், “இந்த தேசம் உயிரற்ற ஜடங்களின் நாடாக இருக்கிறது. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கும் எந்த நாட்டிலும் இப்படி மக்கள் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். 2014ல் பெட்ரோலிய பொருட்களில் ரூ75000 கோடியை வரியாக ஈட்டிய அரசு, இப்போது ரூ3,50,000 கோடியை பிடுங்கித் தின்கிறது. இது பகல் கொள்ளையில்லையா?” என்று கீச்சியிருக்கிறார். இப்படி அத்தியாவசிய பிரச்சினைகளில் கூட அரசியல் நீக்கம் செய்யப்பட்டு சுரணையற்று கிடக்கும் தேசத்தில் எந்த சலனமும் தென்பட்டுவிடக்கூடாதே என்ற அக்கறையில் செந்தமிழன் சீமான் போன்றவர்கள் மக்களைக் காயடிக்க அரும்பாடு படுகிறார்கள். தமிழினத்தின் அரசியல் மீட்புதான் சீமானின் லட்சியம் என்றால் இத்தனை வருடங்களில் எத்தனை மக்கள் பிரச்சினைகளில் அவர் தலையிட்டு களம் கண்டிருக்க வேண்டும். ஆனால் கடும் விலைவாசி உயர்வு, மாநில…
எதிர்ப்பின் அடையாளங்கள் அரிதாரம் பூசும் தருணத்தில் வெறுப்பின் அவதாரங்கள் அரியணை ஏறுகின்றன.. அகமதாபாத் பற்றி எரிந்தது. வாரணாசி பற்றி எரிந்தது. டெல்லி பற்றி எரிந்தது.. குஜராத் குடுவையில் மீண்டும் ஒரு முறை செந்நீர் அமிலம் ஊற்றி எரிசோதனை நடக்கிறது.. சனநாயக காட்சிப் பேழைகளில் கலைநய ஒப்பனையோடு நேர்த்தியான அலங்கோலங்கள்.. காரணங்கள் புதிது.. களம் புதிது.. பிண்டம்வைத்து நடக்கும் காரியங்கள் எந்நாளும் அழியாத அரதப்பழசு.. மக்களை பிளவுபடுத்தி விட்டால், வாய்ச்சவடால் டெல்லிவரை பேசும் என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்தே குறைந்தபட்சம் பத்து தேர்தலுக்கு வெற்றியைப் பறிக்கும் தந்திரத்தைக் கற்றவர்கள் உத்திரபிரதேச தேர்தலை முன்னிறுத்தி களமாடத் தொடங்கி விட்டார்கள். ஓட்டுப் பொறுக்குவதில் பல்வேறு வரிசை மாற்றங்களையும் அணி சேர்க்கைகளையும் (permutations and combinations) சாத்தியப்படுத்த, சமூகம் செங்குத்தாக உயிரோடு பிளக்கப்படும் வேளையில், படுகளத்தில் ஒப்பாரி எதற்கு என்று மட்டுமே சாமானியன் தன்னைத் தேற்றிக் கொள்ள முடியும். எந்தவொரு சித்தாந்தமும் முரட்டுத்தனமாக அதன் எல்லைகளுக்கு விரட்டிச்…
பெண் என்றால் இரங்க இவர்கள் பேய்களா…? குற்றச் செயல்களால் விளையும் அநேக மரணங்கள் நம்மை உலுக்கிப் போடும். குற்றங்களைத் தடுக்கும் – தண்டிக்கும் அதிகாரம் பெற்ற அமைப்புகளே அத்தகைய மரணங்களுக்கு காரணமாக இருக்கும்போது நாம் பெரும் பீதிக்குள்ளாகிறோம். அதே அதிகாரம் குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், வகுப்புவெறியில் ஊறித் திளைத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு மட்டுமன்றி குறிப்பிட்ட சமூகத்துக்கே எதிராகவும், குற்றவாளிகளுக்கு அரணாகவும் நிற்கும்போது, அந்த கொடூர மரணங்கள் நம்மை நடுநடுங்க வைத்து சர்வநாடியையும் ஒடுக்கிவிடும். அந்த வகையில்தான் ஒரு 21 வயது இஸ்லாமியப் பெண்ணின் மரணம் நம் முதுகுத் தண்டுகளை உறைய வைத்துள்ளது. காவல் துறையில் பணியாற்றுபவர் இந்த பெண். ஒருநாள் பணிக்குச் சென்றவள் வீடு திரும்பவில்லை. குதறி எடுக்கப்பட்ட அவளது உடல் ஆள் அரவமற்ற வனாந்திர பகுதியில் கண்டெடுக்கப்படுகிறது. தனக்கு நடந்த கொடூரத்தைத் தடுக்க முயன்ற அந்த பெண்ணின்…
ஏகாதிபத்திய ஏவல் படைகளும் காந்தியின் அகிம்சையும் தப்பும் தவறுமாக கணக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரிடம் பயிலும் மாணவன் கணக்குப் பாடத்தை குத்திக் குதறாமல் என்ன செய்வான்? ஆயுதங்களைக் கொடுத்து ஊக்கவிக்கப்பட்ட கும்பல் எந்த பகுதியில் சமாதானம் பேச வந்திருக்கிறது? இந்திய சுதந்திரப் போரில் கூட ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுக்கள் வலுவிழந்தது காந்தியின் கொள்கைப் பிடிப்பாலும் அவருக்கிருந்த மக்கள் செல்வாக்கால் மட்டுமே. காந்தியின் அகிம்சை என்பது வெற்று போதனையல்ல. களத்தில் நிற்பதை தனது கடமையாக அவர் கருதினார். அதனால் அவரது அகிம்சை எல்லோருக்கும் பாடமானது. கலவரங்களுக்காக பணத்தாசை காட்டி ஏதிலிகளை, அடிதட்டு மக்களைக் காலாட் படைகளாக பாவித்துவிட்டு அரசியல் ஆதாயத்தை அடைபவர்களை முற்றிலும் விடுவித்து விட்டு காலாட்படைகளுக்கு சமத்துவ – சகோதரத்துவ காலட்சேபம் நடத்துவதால் ஏதாவது பயனிருக்க முடியுமா? உரிமைகளுக்கு போராடுகிறவர்களை மட்டும் குறிவைத்து “ஆயுதமில்லாத உலகம்” என்ற பாடத்தை நடத்துபவர்களைப் பார்க்கும்போது காந்தியின் அகிம்சை பரிதவித்துப் போகிறது. பிரிட்டிஷ் ஆட்சியில்…
உலகில் மிக மோசமாக வஞ்சிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட மக்களாக பல்வேறு மனித உரிமை அமைப்புகளால் வரையறுக்கப்பட்டவர்கள் ரோஹிங்கிய முஸ்லிம்கள். 2017ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரக்கணக்கான பேர்கள் கொல்லப்பட்டும் 7,40,000 பேர் அகதிகளாக – குற்றுயிரும் குலையுயிருமாக – விரட்டப்பட்ட பேரவலத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள். இன்றளவும் அவர்கள் அனுபவித்துவரும் துன்பங்கள் துயரங்களுக்காக உலகிலுள்ள பௌத்தர்கள் மண்டியிட்டு தங்களின் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. அப்படி நாம் எதிர்நோக்குவது கூட எந்த விதத்திலும் நியாயமாகாது. அதேதான் பலஸ்தீன, உய்குர் முஸ்லிம்களின் நிலையும். இதற்காக எல்லா யூதர்களும் சீனர்களும் கையை உயர்த்தி சரணடையப் போவதில்லை. அதே போன்று சர்வதேச அளவில் வாழ்வதற்கு அதிக ஆபத்தான நாடுகள் பட்டியலில் இருக்கும் நாடுகளான வெனசூலா, பப்பா நியு கினியா, மெக்ஸிகோ காங்கோ பற்றிய செய்திகள் அதிகம் வெளிவருவதில்லை. அப்படி வந்தாலும் இந்த பிரதேசங்களில் அமோகமாக நடக்கும் போதை மருந்து மற்றும் ஆயுத வியாபாரம், சர்வதேச கூலிப்படை, தீவிரவாதம் என்று…