இஸ்ரேல் என்ற மனநோயாளியின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து பாலஸ்தீனம் என்ற நாட்டின் கால்வாசிப் பகுதிதான் இன்று முஸ்லிம்களின் வசம் இருக்கின்றது. ஆக்கிரமிக்க வந்தவன் நாட்டை பிடித்து தான் ஒரு நாடு என்று அறிவித்திருக்கின்றான். ஆனால் புனித பூமியின் சொந்தக்காரர்களோ சொந்த பூமியில் அகதி வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வரலாற்றைப் புரட்டிப் படிக்கும் போது பாலஸ்தீனம் பல தலைமுறையைக் கடந்து வந்திருந்தாலும் நபிமார்களின் பூமி, இஸ்லாம் வளர்ந்த இடம் என்ற அடிப்படையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இடமாக இருக்கிறது.
பாலஸ்தீனம்இஸ்லாத்தின் பூமி .தெய்வீக தூதுகளின் பிறப்பிடம் இறைத்தூதர்களின் இல்லறம். பல நபிமார்களின் வாழ்வை இந்த வரலாறு உள்ளிடக்கியிருக்கிறது.பலஸ்தீன வரலாற்றை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமெனில் இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்விலிருந்து தொடங்க வேண்டும். இல்லையெனில் நுனிப்புல் மேய்ந்த கதையாகி விடும். இஸ்லாமிய தேசம், பல நபிமார்களின் பிறப்பிடம், புனிதமிக்க மஸ்ஜிதுல் அக்ஸாவின் அமைவிடம் போன்ற பல சிறப்புகளைப் பெற்ற தேசம் தான் பாலஸ்தீனம்.
ஹதீஸ்களில் ‘ஷாம்’ நாடு பற்றி சிறப்பித்துப் பேசப்பட்டுள்ளது. ‘ஷாம்’ என்றால் இன்றைய சிரியா, ஜோர்தான், லெபனான், பாலஸ்தீன் சட்டவிரோதமாக பலஸ்தீனில் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் என அனைத்துப் பகுதியையும் உள்ளடக்கியதாகும். நபியர்களது காலத்தில் இருந்து சுமார் 70 ஆண்டுகள் வரை இப்படித்தான் இருந்தது. ஸியோனிஸ சக்திகளாலும் பிரிட்டிஷ், பிரான்ஸ் நரித்தன நாடுகளாலும் ஷாம் துண்டாடப்பட்டு நான்காகக் கூறு போடப்பட்டன. பலஸ்தீனில் சட்டவிரோதமாக இஸ்ரேல் உருவாக்கப்பட்டது.
பாலஸ்தீன வரலாற்றில் பைத்துல் முகத்தஸின் இடம் மிக முக்கியமானது. அது முஸ்லிம்களின் முதல் கிப்லாவாக இருந்தது. இங்கிருந்துதான் நபி(ஸல்) அவர்கள் விண்ணுலகப்பயணம் மேற்கொண்டார்கள். இங்கு தான் நபி ஈஸா (அலை) அவர்கள் இறங்குவார்கள். இறையில்லமான கஅபா நபி(ஸல்) அவர்களின் பள்ளியான மஸ்ஜிதுந் நபவி , அதற்கடுத்தபடியாக நன்மையை நாடிப் பயணம் மேற்கொள்ளும் இடம் பலஸ்தீனத்தின் பைத்துல் முகத்தஸ்தான். மூன்றாவது புனித பூமி.
உலக முஸ்லிம்கள் தங்களது தொழுகையின்போது கிப்லா (வழிபடும் திசை )வாக மக்காவிலுள்ள கஅபா எனும் இறை ஆலயத்தின் திசையை கணக்கிடுவார்கள். கஅபா முஸ்லிம்களின் இரண்டாவது கிப்லா! முதல் கிப்லாவாக இருந்தது பாலஸ்தீனத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா எனும் இறைய ஆலயம். உலக முஸ்லிம்களின் மையமாகத் திகழ்வது தான் பலஸ்தீன பூமி. திருமறைக் குர்ஆனில் இந்த பலஸ்தீனத்தை இறைவன் “பாக்கியம் நிறைந்த பூமி”, “ஆசீர்வதிக்கப்பட்ட பூமி” “அருள்பாலிக்க பூமி” என சிறப்பித்துக் கூறுகிறான்.
நபி(ஸல்) அவர்கள் ஷாமுக்கு நற்செய்தி உண்டாகட்டும் என மூன்று முறை கூறினார்கள். காரணம் கேட்டபோது ஷாமுக்கு மேலே அல்லாஹ்வின் மலக்குகள் தமது இறக்கைகளை விரித்துள்ளனர் என்று கூறினார்கள். (திர்மிதி)
“நீங்கள் பல குழுக்களாகப் பிரிந்து போராடுவீர்கள். ஈராக்கில் ஒரு படை, யமனில் ஒரு படை, ஷாமில் ஒரு படை என நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ‘அப்போது நான் இருந்தால் எந்தப் படையுடன் சேர்ந்து கொள்ள வேண்டும்?’ எனக் கேட்டபோது ஷாமின் படையுடன் சேர்ந்துகொள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஹாகிம், அஹ்மத்)
முஹம்மது ஸல் அவர்களால் அதிகம் பிராத்திக்கப்பட்ட இடங்களில் ஒன்று ஷாமும் தான்..!அல்லாஹுவின் பர்க்கத் பொருந்திய இடமும் ஷாம் தான்..!உலகில் அனுப்பப்பட்ட அத்தனை நபிமார்களின் நெற்றி சுஜூத் செய்ததும் ஷாமில் தான்..! முஹம்மது ஸல் அவர்கள் முதல் முதலாக மக்காவை விட்டு வியாபாரத்திற்காக சென்ற இடமும் ஷாம் தான்..! பாரசீக கோட்டையில் இஸ்லாமியகொடி பறக்கும் என்று முஹம்மது ஸல் அவர்கள் கூறினார்கள் அதுவும் ஷாம் தான்..!எட்டாயிரத்திற்கும் அதிகமான சஹாபாக்கள்_சஹீதானதும் இந்த ஷாமிற்காக தான்..!உலகில் பல இடங்களில் குழப்பம் ஏற்படும் போது ஈமான் தஞ்சம் அடைவது ஷாமில் தான்..!
அல் குர் ஆன் பேசுகிறது .
- (நாம் ) சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் . அது அவரை அவர் ஏவுகின்ற பிரகாரம் ,நாம் அருள் புரிந்த பூமியை நோக்கி எடுத்துச் செல்லும் ,மேலும் நாம் அனைத்து விடயங்களையும் அறிந்தவர்களாக உள்ளோம் (அல் குர் ஆன் )
- இந்த வஹியுடைய வார்த்தைகள் சுலைமான் (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களின் ஆட்சிப் பிரதேசமாகிய ஷாம் எனும் பகுதியை பற்றியே குறிப்பிடுகின்றது .
- மேலும் அவர்கள் அவர் விடயத்தில் சூழ்ச்சி செய்யவே நாடினார்கள் .எனவே நாம் அந்த சூழ்ச்சிகளில் இருந்து அவரை காப்பாற்றி அவர்களை இழிவடைந்தவர்களாக்கினோம் . மேலும் அகிலத்தாருக்கு நாம் அருளாகக் கொடுத்த பூமிக்கு அனுப்பப் பட்ட லூத் (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களையும் காப்பாற்றினோம் .(அல் குர் ஆன் )
- இங்கு இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களை பாதுகாத்ததாக குறிப்பிடும் அல்லாஹ் ,லூத் (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களையும் அரபு தீபகற்பம் மற்றும் ஈராக் பகுதிகளில் இருந்து ஷாம் பிரதேசத்தின் பால் அனுப்பப் பட்டு அவர்களையும் பாதுகாத்ததாக குறிப்பிடுகின்றான் .
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற் கொண்டபோது அவர்கள் புனித மக்காவிலிருந்து பாலஸ்தீனத்தின் அக்ஸாவிற்கு வந்துதான் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டார்கள். நேரடியாக மக்காவிலிருந்து இந்தப் பயணம் அமையாமல் வெகு தொலைவிலுள்ள இந்தப் பகுதியை உள்ளடக்கிய பயணமாக அமைந்தது இறைவளின் திட்டமிட்ட ஏற்பாடு. நபி ஈஸா(அலை) அவர்களை நபியாக ஏற்றுக் கொள்ளாத எவரும் முஸ்லிமாக இருக்கமுடியாது. “நபி ஈஸா(அலை) அவர்கள் மீண்டும் உலகிற்கு வருவார்கள். அவர்கள் பாலஸ்தீன பூமியில்தான் இறங்குவார்கள். அங்குதான் தஜ்ஜால் எனும் கொடியவனை எதிர்த்துக் கொல்வார்கள். அது நிகழாத வரை உலகம் அழியாது” என்னும் நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு ஒவ்வொரு முஸ்லிமீன் கொள்கை நம்பிக்கை சார்ந்த விசயம்.
நபி ஈஸா(அலை) அவர்களோடு மட்டும் தொடர்புடைய பூமியல்ல பாலஸ்தீன் இது நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் பூமி, நபி யாகூப் (அலை) அவர்களின் மண். நபி மூஸா(அலை), நபி லூத் (அலை). நபி சுலைமான் (அலை) அவர்களின் பூமி நபி(ஸல) அவர்களின் பூமி அவர்களைப் பின்பற்றும் ஒவ்வொரு மனிதனுடைய பூமி இது ! இது நபிமார்கள் பிறந்த பூமி. நடமாடிய பூமி நபி மார்களுக்கு நபித்துவம் வழங்கப்பட்ட பூமி. ஹிஜரத் எனும் இடம் பெயர்ந்த பூமி ஆட்சி செய்த பூமி நபிமார்கள் அடக்கம் செய்யப் பட்ட பூமி .
அன்று மாத்திரமல்ல, இன்றும் முஸ்லிம்கள் மூன்று இடங்களைத் தவிர நன்மையை நாடி வேறு எந்த இறையில்லத்திலும் தொழ வேண்டும் என்பதற்காகப் பயணிக்கக்கூடாது. அதில் ஒன்றுதான் மஸ்ஜிதுல் அக்ஸா! நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், “மக்காவிலிருக்கும் கஅபா, மதீனாவிலிருக்கும் மஸ்ஜிதுந் நபவீ, பாலஸ்தீனத் திலிருக்கும் மஸ்ஜிதுல் அக்ஸா இந்த மூன்று இறையில்லங்களைத் தவிர வேறு எங்கும் நன்மையை நாடிப் பயணிக்கக்கூடாது”.
நபி(ஸல்) அவர்களின் மற்றொரு முன்னறிவிப்பு “இந்தச் சமூகத்தில் ஒரு பிரிவினர் தீனில் எப்போதும் நிலைத்திருப்பார்கள். எதிரிகளுக்கு முன்னால் அவர்கள் தாக்குப்பிடிப்பார்கள் எதிரிகளை முறியடிப் பார்கள் அவர்களோடு யார் முரண்பட்டாலும் மோதினாலும் அவர்களுக்கு எந்தக் குறையும் ஏற்படாது ஆயினும் அவ்வப்போது சில இழப்புகளுக்கு ஈடு கொடுப்பார்கள் உயிரத்தியாகம், பொருளதியாகம் செய்வார்கள் இழப்புகளைத் தாங்கிக்கொள்வார்கள். அக்குழு சத்தியத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கும். அவர்கள் எதிரி களுக்கு முகம்கொடுத்தவண்ணமே இருப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ‘இறைத்தூதரே! சத்தியத்தில் நிலைத்திருக்கும் இக்கூட்டம் எங்கே இருப்பார்கள் ?” என்று தோழர்கள் வினவினார்கள் அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘பைத்துல் முகத்தஸைச் சூழ பாலஸ்தீன பூமியில் இருப்பார்கள்” என்று கூறினார்கள்
நபி(ஸல்) அவர்கள் பலஸ்தீனத்தின் மீது கவனம் செலுத்தினார்கள். தமது இறுதிக்காலத்தில் உஸ்மா (ரலி)அவர்களின் தலைமையில் பாலஸ்தீனத்தை நோக்கி படையைத் தயார் செய்தார்கள். இப்படையை அனுப்புவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள் நபி(ஸல்) அவர்களின் விருப்பத்தின்படி உமர் பின் கத்தாப்(ரலி) களமிறங்கி கொண்டுவந்தார்கள். இப்பூமியை இஸ்லாத்தின் ஆளுகையில் பாலஸ்தீனத்தையும், அதைச் கட்டுப்பை தொடர்ந்து உமையாக்களும் அப்பாஸிகளும் சுற்றியுள்ள பிரதேசங்களையும் தங்களின் கூட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சிலுவை வீரர்கள் பைய பைத்துல் முகத்தஸையும் பாலஸ்தீனத்தையும் கைப்ப ற்றப் போராடியபோது யுத்த அதற்கெதிரான தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன கைப்பற்றப் அந்த வரிசையில் சுல்தான் சலாஹுத்தீன அய்யூபி மகுடமாய்த் திகழ்ந்தார். உஸ்மான(ரலி) ஆட்சியிலிருந்து சுல்தான அபதுல் ஹமீது ஆட்சிக்காலம் வரையில் தொடர்ந்த வரலாறுதான் 1948.ஆம் ஆண்டிற்குப் பிறகு யூத சாமராஜயமாக மாறியது.
“நபி இப்ராஹீம் யூதராகவோ, கிறித்தவராகவோ இருக்கவில்லை. அவர் தூய முஸ்லிமாக இருந்தார்” என்று திருக்குர்ஆன் தெளிவு படுத்துகின்றது. நூஹ் (அலை) அவர்கள் “நான் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டுமென அல்லாஹ்வினால் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்று கூறினார்கள் நபி யாகூப்(அலை) அவர்களுக்கு “இந்தத் தீனை உங்களுக்கான தீனாக அல்லாஹ் தேர்வு செய்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்கவேண்டாம்” என்று அறிவுறுத் தப்பட்டது நபி மூஸா(அலை) அவர்கள் தவ்ராத்தைச் சுமந்து வந்த வர்கள் நபி மூஸா(அலை) அவர்களை “தூய்மையான, கண்ணியமான, பாலஸ்தீன பூமியில் நுழையுங்கள்” என இறைவன் கட்டளையிடுகின்றான். மூஸா (அலை) அவர்கள் பனூ கட்டளை இஸ்ரவேலர்களைப் பார்த்து “என் சமூகத்தவர்களே! அல்லாஹ் உங்களுக்கென்று விதித்துள்ள இந்த பூமியை நோக்கிச் செல்லுங்கள்” எனக் கூறினார்கள்,
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எகிப்திலிருந்து பைத்துல் முகத்தஸ் புலம்பெயர்ந்தவர்கள்.
யாகூப் நபி தான் அல் மஸ்ஜிதுல் ஆஷாவுக்கு அடித்தளம் இட்டார் அதுதான் ஈலியா மஸ்ஜித் என்றும் பைத்துல் முகத்தஸ் மஸ்ஜித் என்று அழைக்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்
உலகில் இரண்டாவதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்ஸாவாகும்.
புனித கஃபா கட்டப்பட்டு நாற்பது வருடங்களின் பின் மஸ்ஜிதுல் அக்சா கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பல மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி மஸ்ஜிதுல் அக்சா நபி ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
நபி இப்ராஹீம் (அலை) மற்றும் இஸ்மாயில் (அலை) அவர்களால் மஸ்ஜிதுல் அக்ஸா புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.நபி தாவூத் (அலை) அவர்களால் மீண்டும் மஸ்ஜிதுல் அக்சா புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. இறுதியாக நபி சுலைமான் (அலை) அவர்களால் மஸ்ஜிதுல் அக்சா கட்டி முடிக்கப்பட்டது.
நபி சுலைமான் (அலை) அவர்களால் கட்டப்பட்ட மஸ்ஜிதுல் அக்சா கி.மு.587 இல் பாபிலோனிய மன்னன் நேபுச்சட்னேச்சர் ( Nebuchadnezzar ) ஆல் தரைமட்டமாக்கப்பட்டது.
இந்த தரைமட்டமாக்கப்பட்ட மஸ்ஜிதுல் அக்சாவையே யூதர்கள் சுலைமான் நபி அவர்களுக்காக கட்டிய ஆலயம் என வாதாடுகின்றனர்.
கி.மு.167 இல் யூதர்கள் இதனை மீண்டும் புனர்நிர்மாணம் செய்தனர் ஆனால் கி.பி.70 இல் யூதர்கள் ஜெருசல நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
கி.பி.637/8 இல் உமர் இப்னு கத்தாப் (ரலி) ஜெருசல நகரை கைப்பற்றும் வரை கிட்டத்தட்ட 600 ஆண்டுகள் மஸ்ஜிதுல் அக்சா வளாகம் குப்பை போடும் இடமாக இருந்துவந்தது.
உமையாத் கலீபா அப்துல்லா மாலிக் இப்னு மர்வானால் கி.பி. 692 (ஹி.ஆ.72/73) இல் அல் சக்ராஹ் (Al-Sakhrah Mosque) கட்டப்பட்டது.
1967 இல் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய படையால் புனித மஸ்ஜிதுல் அக்சா ஆக்கிரமிக்கப்பட்டது.யூத ஆக்கிரமிப்பாளர்கள் மஸ்ஜிதுல் அக்சாவை அழிக்க பல முயற்சிகள் செய்தனர்.இன்னும் செய்துகொண்டும் உள்ளனர். 900 ஆண்டுகள் பழமையான, இஸ்லாத்தின் மிக உன்னதமான வீரர்களில் ஒருவரான சலாஹுத்தீன் ஐயூபி அவர்களால் கட்டப்பட்ட மிம்பர் 1967 இல் அழிக்கப்பட்டது.
இங்கு நபி ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்),தான் வாழ்ந்த காலத்தில் ஓர் இறையில்லத்தை நிறுவினார்கள். அந்த இறையில்லத்தை அன்றைய ஹீப்ரு மொழியில் ‘பெத்ஹம்மிக்தாஷ்’ எனப் பெயரிட்டு அழைத்தனர். அப்பெயரே அரபு மொழியில் பைத்துல் முகத்தஸ் என ஆயிற்று. காலப்போக்கில் இந்தப் புனித இல்லம் அமைந்திருந்த முழுப் பிரதேசமும் இப்பெயராலேயே அழைக்கப்படலாயிற்று. பொதுவாக இந்த மஸ்ஜிதை அல் அக்ஸா அல்லது மஸ்ஜிதுல் அக்ஸா எனவும் அழைப்பர். நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்திய மன்னரான பிர்அவ்னின்
துன்பத்திலிருந்து யூதர்களை மீட்டு நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அங்கு குடியேறினார்கள்.
அங்கே மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இறைவனின் கட்டளைப்படி
பழைய அஸ்திவாரத்தின் (பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலுள்ள ஒரு
நபியினால் கட்டப்பட்ட பள்ளியின்) மீது ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள்.
அதிலே குர்ஆனில் கூறப்பட்ட ‘தாபூத்’ என்ற பெட்டியையும், அவர்களுக்கு
அருளப்பட்ட கட்டளைகளையும் வைத்துப் பாதுகாத்தார்கள். மிகவும்
புனிதமாகக் கருதப்பட்ட (குர்பான் கல்) பலிபீடமும் அங்கு இருந்தது. அதன்
திசையிலேயே யூதர்களின் வணக்கம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. மூஸா (அலைஹிஸ்ஸலாம்)
அவர்களுக்குப் பின் ஹாரூன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இப்பள்ளிவாசலைப் பொறுப்பேற்றுப்
பாதுகாத்து வந்தார்கள். மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் அற்புத (அஸாவும்) கைத்தடியும்
அப்பெட்டியில் வைக்கப்பட்டது. இப்போது அதன் புனிதம் அதிகப் படுத்தப்பட்டு விட்டது. ஹாரூன்
(அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்குப் பின் யூதர்கள் பள்ளிவாசலைப் பாழடைய விட்டனர்.
ஆரம்ப காலம் முதல் பைது முகத்தஸ் மஸ்ஜித் அமைந்துள்ள ஜெரூஸலம் நகர் ‘ஸலேம்’ என்றே அழைக்க்ப்பட்டு வந்தது. இங்கு வாழ்ந்து வந்த ‘கனாஅனைட்’ எனும் பிரிவினர் பலஸ்தீனர்களின்
மூதாதையராவர். இவர்களில் தோன்றிய நேர்மை மிக்க அரசனொருவன், அதுவரை ஸலேம் என்ற பெயரில் இருந்த கிராமத்தை ஒரு நகராக்கி அங்கு ஒரு தேவாலயத்தையும் நிறுவி அந்நகருக்கு ஜெரூஸலம் எனவும் பெயரிட்டான். கி.மு. 1800களில் வாழ்ந்த இந்த அரசன் ‘மெல்ஸிஸேடக்’
எனும் பெயர் கொண்ட நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சமகாலத்தவராவான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நகர் கி.மு. 1600 முதல் 1300 வரை எகிப்து நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இக்காலப் பிரிவில் இந்நகர் ‘ஹீப்ரு’ எனும் பிரிவினரின் தாக்குதலுக்கு உள்ளானது. இப்பிரிவினர்தான் யூதர்களின் மூதாதையர்களாகவும் கருதப்படுகின்றவர்களாவர். காலவோட்டத்தில்
கனானைட்டுக்களதும் எகிப்தியர்களதும் பண்பாட்டுச் சீர்கேடுகளால் அவர்கள் வீழ்ச்சி கண்ட போது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ஹீப்ரூக்கள் பலஸ்தீனில் (கன்ஆன்) தமது
நிலைகளைப் பலப்படுத்திக் கொண்டனர்.
இக்காலகட்டத்தில் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருந்த ஹீப்ரூக்கள் மத்தியில் மூஸா எனும் எனும் பெயர் கொண்ட ஒரு பெரும் தலைவர் தோற்றம் பெற்றார். இறைத் தூதராக வருகை தந்த நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) ஹீப்ரூக்களை எகிப்திலிருந்து வெளியேற்றி அவர்களை நெறிப்படுத்தி வந்தார்கள். இவர்களைத் தொடர்ந்து அவர்களது சகோதரர் ஹரூன் (அலைஹிஸ்ஸலாம்) ஹீப்ரூக்களை கன் ஆனுக்கு அழைத்துச் சென்றார். அங்கு முன்பே வாழ்ந்து
வந்த ஹீப்ரூ இனத்தாருடன் இவர்களும் இணைந்து அப்பிரதேசத்தில் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வரலாயினர்.
இதற்குப் பின்னரும் யூதர்கள் இப்பிரதேசத்தில் தொடர்ந்து வாழ்ந்து வந்தனராயினும் அவர்கள் தமக்குள்ளே பல பிரிவுகளாகப் பிரிந்து ஒழுக்கச் சீர்கேட்டோடு வாழ்ந்த போதெல்லாம்
அவர்களைச் சீர்திருத்தவென அவ்வப்போது பல சீர்திருத்தவாதிகள் அவர்களிடையே தோன்றினர். இவ்வாறு தோன்றிய சீர்திருத்தவாதிகளுள் மிகப் பெரும் அரசர்களாகத் தோற்றம் பெற்ற நபி தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) ஆவர்களும் அவர்களது புத்திரர் நபி ஸுலைமான் عليه السلام அவர்களும் குறிப்பிடத்டக்கவர்களாவர். நபி தாவூதின் ஆட்சியில்தான் ஹீப்ரூக்களுக்கு கன் ஆனில் முதன்முதலாக உறுதி மிக்கதோர் ஆட்சியை நிறுவ முடிந்தது. மட்டுமன்றி இக்காலப் பிரிவில்தான் (கி.மு. 1000) ஜெரூஸலம் நகரும் முதல் தடவையாக ஹீப்ரூக்கள் வசமாகியதால் நபி தாவூத் عليه السلام இந்த நகரை யூத சாம்ராஜ்ஜியத்தின் தலை நகராகப் பிரகடனம் செய்தார்.
நபி தாவூத் (அலைஹிஸ்ஸலாம்)யைத் தொடர்ந்து அவரது மகன் ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) இப்பிரதேசத்தின் ஆட்சியாளரானார். ஏற்கெனவே மெல்ஸி ஸேடக் அரசனால்
நிறுவப்பட்ட தேவாலயம் இருந்த இடத்தில் நபி ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) யூதர்களுக்கெனத் தனியான ஓர் ஆலயத்தை நிறுவினார். அதில் ஸ்தூபிகள், வளைவுகள், சங்கிலிகள் யாவும் தங்கத்தினாலேயே செய்யப்பட்டன. ஏராளமான வைர வைடூரியங்களும் பதிக்கப்பட்டு ஜெகஜோதியாக விளங்கிற்று.
சரித்திராசிரியர்களின் கூற்றுப்படி ஆச்சரியப்படத்தக்க அநேக விநோதங்கள் அப்பள்ளிவாசலில் இருந்தன. அதிகம் நபிமார்களும் அங்கே அடக்கம் செய்யப்பட்டார்கள். நபி ஸுலைமான் மரணித்த பின்னரும் யூதர்களின் ஆட்சியானது பல்வேறு சிக்கல்களுக்கும் தடங்கல்களுக்கும் மத்தியில் சுமார் நான்கு நூற்றாண்டுகள் நிலைத்திருந்தது. இக்காலகட்டத்தில் அஸீரியர், அரேபியர்,
எகிப்தியர் முதலானோர் இப்பிரதேசத்தின் மீது படையெடுத்தும் முற்றுகையிட்டும் வந்தனர். கி.மு. 587ல் யூத சாம்ராஜியம் பபிலோனியரின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இதன்போது யூதர்களுக்கும்
பபிலோனியருக்குமிடையில் ஏற்பட்ட கலகத்தில் ஜெரூஸலம் நகர் அழிந்தொழிந்தது. இதன்போது இங்கு நபி ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) நிறுவிய ஆலயமும் எரிந்து சாம்பலாகியது.
அங்கே குடியேறிய யூதர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்து பாவமான காரியங்களில் அதிகமாக ஈடுபட்டனர். அப்போது இறைவனால் அனுப்பப்பட்ட அர்மியாஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் எச்சரிக்கை செய்தும் யாரும் திருந்தவில்லை. மாறாக அர்மியா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப்
பிடித்துச் சிறையில் இட்டார்கள். இறைவன் அவர்கள் மீது ‘பக்து நஸர்’ என்ற அரசன் மூலமாக அழிவை ஏற்படுத்தினான். பக்துநஸர் பைத்துல் மகத்திஸைக் கைப்பற்றி பள்ளிவாசலில் இருந்த அபூர்வப் பொருட்களையெல்லாம் தீக்கிரையாக்கினான். தௌராத் வேதமும் பத்துக்கட்டளைகளும், தாபூத் என்ற பெட்டியும் மூஸா عليه السلام அவர்களின் அற்புதக் கைத்தடியும் நெருப்புக்கு இரையாகின. பள்ளிவாசலை இடித்துத் தரைமட்டமாக்கினர். அதிலிருந்த தங்கம்
மாத்திரம் ஆயிரம் ஒட்டகைகள் சுமந்து செல்லக்கூடியதாக இருந்தன. பள்ளிவாசல் இருந்த தடமே தெரியாமல் தரைமட்டமாக்கினான். பலிபீடம் மாத்திரம் நெருப்புக்கு இரையாகாமலும், ஆயுதங்களின் தாக்குதல்களுக்கு வளையாமலும் தலை நிமிர்ந்திருந்தது. அதன்மீது மணலை வாரிக் கொட்டி மறைத்து விட்டான். அங்கே இருந்த யூதர்களில் வாலிபர்களையும், பலசாலிகளையும் கொன்று குவித்தான். கிழவர்களையும், அங்கவீனர்களையும் விட்டுவிட்டான். இளம்பெண்களை விலை கூறிப் பணமாக்கினான். சிறுவர்களைத் தனது படை வீரர்களுக்கு ஆளுக்கு நாலு சிறுவர்களாகப் பங்கு வைத்தான். இவ்வாறு பங்கு வைக்கப்பட்ட
சிறுவர்களில் நபி தானியல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் இருந்தார்கள். சிறையிலிருந்த
அர்மியாஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை விடுதலை செய்து கண்ணியப்படுத்தினான்.
பக்துநஸர் கையில் அகப்படாமல் சில யூதர்கள் தப்பியோடினார்கள். இப்படி ஓடியவர்களில் சிலர் யத்ரிப் (இப்போது மதீனா) பிலும், சிரியாவிலும் குடியேறினார்கள். இவ்வாறாக நாற்பது ஆண்டுகள் வெறும் காடாகவே பைத்துல் முகத்திஸ் இருந்து வந்தது. யூதர்கள் இப்படி அழிவுற்றதால் தௌராத் வேதம் ஓரிரு வருடங்களில் ஒரு எழுத்தேனும் இல்லாமல் அழிந்து போயிற்று. வேதம் மறைக்கப்பட்டதை அறிந்த அல்லாஹ் உஸைர் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு தௌராத் வேதத்தைக் கற்றுக்கொடுத்து அவர்களை பைத்துல் முகத்தஸ் சென்று அங்கே மக்களுக்குக்
கற்றுக் கொடுக்கும்படி நபியாக அனுப்பி வைத்தான்.
உஸைர் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பைத்துல் முகத்தஸ் வந்தபோது அங்கு யாரும் காணப்படவில்லை. குட்டிச் சுவர்களும், மணல் மேடுகளையுமே அங்கு காணக் கூடியதாக இருந்தது. இவ்வாறு அழிந்துபோன நகரம் எவ்வாறு உயிர் பெறும்? யார் இதைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவார்கள்? என எண்ணினார்கள். இறைவன் அவர்களுக்குத் தூக்கத்தைக் கொடுத்தான். (ஒரு மரத்தடியில் நூறு வருடம் அவர்கள் தூங்கினார்கள் – அல்குர்ஆன் (02:259) இந்த நிகழ்வு இடம்பெற்று சுமார் ஐம்பது ஆண்டுகளின் பின்னர் கி.மு. 538ல் பாரசீக மன்னர் ஸைரஸ் ( Cirus ) பபிலோனியரைத் தோல்வியுறச் செய்து பலஸ்தீனைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தான்.
யூதர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய ஸைரஸ், பபிலோனியரால் துரத்தப்பட்டிருந்த யூதர்களை பலஸ்தீனில் மீள்குடியேற வழி செய்ததோடு எரிந்து சாம்பலாகிய ஆலயத்தைப் புனருத்தாரணம்
செய்யவும் வழிவகை செய்தான். கி.மு. 515ல் நபி ஸுலைமானின் ஆலயம் ஸைரஸினால் கட்டி முடிக்கப்பட்டது. இதன்பின்னர் இவர்கள் மீண்டும் திருந்தி வளம் மிக்க மக்களா வாழ்ந்து வரலாயினர்.
இறை தூதர்களால் கட்டப்பட்ட மஸ்ஜித்கள் இன்று பூமியில் இருக்கும் மஸ்ஜித்களில் இறைத்தூதர்களால் கட்டப்பட்ட நான்கே நான்கு மஸ்ஜித்கள்
மட்டுமே உள்ளன.
- மஸ்ஜிதுல் ஹராம்.
- மஸ்ஜிதுன் நபவி.
- பைதுல் முகத்தஸ்.
- மஸ்ஜிதுல் குபா
- இவற்றில் மஸ்ஜிதுன் நபவி, குபா
மஸ்ஜித் என்பன நபி صلى الله عليه وسلم அவர்களால் கட்டப்பட்டன.
தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப் பட்ட பகுதி தஜ்ஜாலின் பித்னா குறித்து நபியவர்கள் அதிகமதிகம் எச்சரிக்கை செய்துள்ளார்கள். அவ்வாறு எச்சரிக்கப்படும் போது பல செய்திகளையும் கூறிவிட்டு, “நான்கு மஸ்ஜித்கள் (இருக்கும் பகுதி) தவிர மற்றைய பகுதியெல்லாம் அவனது அதிகாரம் வியாபித்திருக்கும். அந்த நான்கு மஸ்ஜித்களாவன, மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுர் ரஸுல், மஸ்ஜிதுல் அக்ஸா, தூர் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.”
எனவே, தஜ்ஜாலின் பித்னாவிலிருந்து பாதுகாப்புப் பெற விரும்புபவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு இடமாகவும் இது திகழ்கின்றது. பலஸ்தீன பூமியில் வைத்துத்தான் ஈஸா நபியால் தஜ்ஜால்
அழிக்கப்படுவான்.
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைதுல் மக்திஸை நோக்கியே தொழுது வந்தார்கள் என்று ஸஹீஹான ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. மட்டுமன்றி பின்வரும் ஹதீஸ்களும் இதன் முகியத்துவத்தை எடுத்துரைப்பதாய் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது.
“எனது சமூகத்தில் ஒரு குழுவினர் திமிஷ்க் மற்றும் பைதுல் மக்திஸின் வாயில் அருகிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் மறுமை நாள் தோன்றும் வரையில் போராடிக்கொண்டிருப்பார்கள்; சத்திய மார்க்கத்தைச் சார்ந்து நின்று (மற்றெல்லா கொள்கை, கோட்பாடுகளையும் ) மிகைத்த நிலையில் காணப்படுகின்ற அந்தக் குழுவினருக்கு துரோகம் இழைக்கின்றவர்களினால் அவர்களுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படப் போவதில்லை.” (முஸ்னத் அஹ்மத்/ மஜ்மஉஸ் ஸவாயித்)
“இறுதிக் காலத்தில் ஹழ்ரமௌத் பகுதியிலிருந்து வந்த மக்களை ஒன்றுகூட்டக்கூடியதொரு நெருப்பு தோன்றும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! இந்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?” என ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு, நபியவர்கள் “நீங்கள் ஷாம் தேசத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என பதிலளித்தார்கள். (அஹ்மத், திர்மிதி)
எழுத்தாளர் – முஹம்மத் தமீஸ் ஸலாமி