Author: Admin

22 மார்ச் 2004 வருடம் மிகச்சரியாக இதே நாள், அதிகாலை ஃபஜர் தொழுகைக்காக சென்று கொண்டிருந்த கண்பார்வை மங்கிய , நடக்க இயலாத உடலின் பல பகுதிகள் செயலிழந்து போன 67 வயதான ஒரு முதியவரை கொலை செய்வதற்கு உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ விமானமான F-16 அணி அணியாக அந்த வீதியில் சரமாரியாக குண்டுகளை வீசியது. திட்டமிட்ட அந்தத் தாக்குதலை “சற்றும் எதிர்பாராததொரு விபத்துதான் இது. நாங்கள் அவரைக் குறிவைத்து ராக்கெட்டை ஏவவில்லை” என்று இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் பொய்தான் சொல்கிறார் என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும். வயதில் மிகவும் முதிர்ந்த, மார்க்கக் கல்வியில் கரை கண்டவரான அவர் பெயர் ஷேக் அகமது யாசின். இருபது ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஹமாஸின் தலைவர். ஹமாஸை வழி நடத்தியவர்கள் எல்லோரும் அரசியல் வல்லுநர்களாக மட்டும்…

Read More

– தேர்தல் கமிசன், நீதிமன்றம், உளவுத்துறை உட்பட அனைத்து தன்னாட்சி நிறுவனங்களும் காவிமயப்படுத்தப்பட்டன – உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியே, ஊடகத்தினர் முன்னிலையில் தோன்றி ஜனநாயகம் சாகடிக்கப்படுகிறது என கூறிய வரலாற்றில் நிகழாத கேவலம் அரங்கேறியது – ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஒத்துவராத அதிகாரிகளைக் கட்டாய விடுப்பு அல்லது ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர் – கல்புர்கி, தபோல்கர், கௌரி லங்கேஷ் என ஃபாசிசத்துக்கு எதிராக தீவிரமாக களமாடிய எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் – மாட்டின் பெயரால் நூற்றுக்கணக்கான படுகொலைகள் செய்யப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் இது 95 சதவீதம் அதிகரித்தது. – ஜி எஸ் டி பெயரால் சிறு, குறு தொழில்கள் மொத்தமாக நசுக்கப்பட்டன – ரிசர்வ் வங்கி டம்மியாக்கப்பட்டு நடத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம், நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் நடுத்தெருவில் வரிசையில் நின்று பலியாகினர். – அம்பானியின் சொத்துமதிப்பு பல மடங்கு உயர்ந்தது – இராணுவத்தின் பாதுகாப்பையே கேலிசெய்து, 42 இராணுவத்தினர்…

Read More

மோடி அரசின் அயலுறவுக் கொள்கையின் தோல்விகள் ———————————————————————————– முன்னாள் அமெரிக்கத் தூதுவர் அருண் சிங் கூறுவன: 1.பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அமெரிக்காவுடன் மோடி அரசின் உறவு அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்தின் அணுகல்முறை வணிகப் பயன்பாட்டின் நோக்கிலேயே உள்ளது. வணிக உறவுகளில் சுய லாப நோக்கில் அமெரிக்கா அளிக்கும் நியாயமற்ற அழுத்தங்கள், வட கொரியா, ஈரான், ருஷ்யா முதலான நாடுகளுடனான உறவுகள், அவற்றின் மீது அது விதிக்கும் தண்டனை நோக்கிலான கட்டுப்பாடுகள் முதலியன இந்திய நலன்களையும், அதன் இழப்புகளையும் கணக்கில் கொள்ளாதவை. எடுத்துக்காட்டாக ஈரானுடன் எண்ணை வர்த்தகம் கூடாது என ட்ரம்ப் விதிக்கும் தடையின் விளைவாக இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு, விலை உயர்வு முதலியன ஏற்படுகிறது. பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் மிகப் பெரிய, நம்பத் தகுந்த பங்காளியான ருஷ்யாவுடனான உறவு சீனாவுடன் இணைக்கப்பட்டு மிகவும் சிக்கலாக மாறிக் கொண்டுள்ளது. முன்னைப்போலன்றி இப்போது ருஷ்ய – பாக் உறவு…

Read More

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சூழலியல் போராளியுமான முகிலனை கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் காணவில்லை. பிப்ரவரி 15 அன்று இரயில் மூலம் சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்றுகொண்டிருந்த முகிலன் காணாமல் போயுள்ளார். அவரை காவல் துறையினர் சட்டவிரோதமாகக் கைது செய்திருக்கலாம் என மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் சூழலியல் ஆர்வலர்களும் சந்தேகிக்கின்றனர். பிப்ரவரி 15 அன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு காவல் துறையால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் காணோளி ஆவணமாக முகிலன் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் காணாமல் போயிருப்பது காவல் துறையினர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆற்று மணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம், மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டும், முன்னின்று நடத்தியும் வந்தவர் முகிலன். சுற்றுச்சூழலை பாதிக்கும் அனைத்துப்…

Read More

இமாம் முஹம்மத் அப்துஹு முஸ்லிம் சமூகத்தினை அதன் சமகால வீழ்ச்சி நிலையில் இருந்து வெளியேற்றி முன்னேற்றத்தின் பாதையில் அவர்களை நடைபோட வைப்பது எனில் முதன்மையாக அவர்களின் மார்க்கம் பற்றிய புரிதலை சீர்திருத்த வேண்டும் (இஹ்லாஹுத் தீனி) என்பார். இத்தகைய புனரமைப்பு அல்லது சீரமைப்பு பணி என்பது இஸ்லாமிய சமூகங்களின் அரசியல், கலாசாரம், பண்பாடு, சட்டவாக்கம் என்று அனைத்தையும் தழுவியதாக இருக்க வேண்டும் என்பது ஷெய்க் முஹம்மத் அப்துஹுவின் அவா. உயிர்த் துடிப்புள்ள சமூக உருவாக்கத்திற்கு ஒரு தத்துவ அடிப்படை அவசியம். முஹம்மத் அப்துஹு வலியுறுத்திய தத்துவ அடிப்படை என்பது மார்க்கம் பற்றிய புரிதலில் இருந்து கிளைத்து எழுவது. அது யதார்த்தபூர்வமானது. மக்களின் அன்றாட வாழ்க்கை கணங்களில் ஊடுருவி அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை அளிப்பது. சமூக உணர்வுகளின் உள்ளீடற்ற ஆன்மீகத்தை புறந்தள்ளி அவ்விடத்தில் மண்ணில் நடைமுறைப்படுத்தக்க ஒரு சமூக, அரசியல் புரட்சியை கொண்டு வருவது தான் ஷெய்க் அப்துஹு…

Read More

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) நாகை மாவட்டத்தின் சார்பாக பட்டம் விடும் திருவிழா கடந்த 20ஆம் தேதி நாகூர் கடற்கரையில் வைத்து கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. பட்டமிடும் திருவிழாவிற்கு SIO நாகை மாவட்ட தலைவர் சகோதரர்.சாதிக் அலி அவர்கள் சகோதரன் குழுவையும் வருகை தருமாறு அழைத்தார். அகமதாபாத்தில் வருடா வருடம் நடைபெறும் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவிற்கு அழைப்பது போல் உற்சாகத்தோடு அழைத்தார். அந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளவே சகோதரன் குழு நாகூர் கடற்கரையை நோக்கி பயணம் மேற்கொண்டது. நாகூர் பேருந்து நிலையத்திற்கு வந்திறங்கியதும், நாகூர் தர்காவிற்கு ஒரு விசிட் செய்து விட்டு நாகூர் தெருக்களில் ஒரு உலா வந்தோம். சிறுவர்கள் விதம்விதமான பட்டங்களோடு சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர். பறவைப் பட்டம், மீன் பட்டம், பெட்டிப் பட்டம், மீனவப் பட்டம் என பலவிதமான பட்டங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அதிலும் குறிப்பாக மீனவப் பட்டத்தினை நான்கு சிறார்கள் ஒன்று…

Read More

‘மெளலானா மெளதூதி எனும் மகத்தான ஆளுமையை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.’என்று சொல்லி முடிப்பதற்குள் ‘ஆம்.. அவரை நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? அவரிடம் கற்பதற்கு என்ன இருக்கிறது?, ஏன் தனி நபரைத் தூக்கிப் பிடிக்கின்றீர்கள்?’என்பன போன்ற வினாக்கள் அடுக்கடுக்காக அலையாய் எழும். அதே வினாக்களுடனே இந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கலாம். இஸ்லாத்தில் தனிநபர் ஆராதனை இல்லை.  தனிநபர் ஒருவரைக் கண்மூடித்தனமானப் பின்பற்றுதலை இஸ்லாம் கண்டிக்கிறது. அதே நேரத்தில் சிறந்த ஆளுமைத் திறன் படைத்தவர்களை அங்கீகரித்தும் இருக்கிறது.  மெளலானா மெளதூதியைக் கற்பது என்பது அவர் முன்வைத்த சித்தாந்தத்தைக் கற்பதாகும். இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக, தனித்துவமிக்க பார்வையில் கருத்தியல் ரீதியாக அவர் முன்வைத்த விதம்தான் அவரை நாம் கற்றுக் கொள்வதற்கான அடிப்படையாக இருக்கின்றது. இந்தக் கண்ணோட்டத்தில் நாம் இங்கு மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்களின் கருத்தியல் வாயிலாக அவரை நாம் கற்க வேண்டும். …

Read More

காலை வணக்கம், இந்தக் கடிதத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது நான் இவ்வுலகை விட்டு நீங்கியிருப்பேன். என் மீது கோபம் கொள்ளாதீர். உங்களில் சிலர் என் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தீர்கள், என்னை பரிபூரணமாக நேசித்தீர்கள், என்னை உரிய மரியாதையுடன் நடத்தினீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். பிரச்சினை எனக்குள்தான் இருக்கிறது. என் உடல் வளர்ச்சிக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் இடையே நிறைய ஏற்றத்தாழ்வு இருப்பதாக உணர்கிறேன். அது என்னை விகாரப்படுத்திவிட்டது. ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம். காரல் சாகன் போல ஓர் அறிவியல் எழுத்தாளனாக வேண்டும் என்பது எனது லட்சியம். ஆனால், என்னால் எழுத முடிந்தது என்னவோ இந்த தற்கொலை கடிதத்தை மட்டுமே. அறிவியல், நட்சத்திரங்கள், இயற்கை இவையெல்லாம் என் விருப்பத்துக்குரியவை. என் விருப்பப்பட்டியலில் மனிதர்களும் இருக்கின்றனர். அவர்கள் இயற்கையுடனான உறவை எப்போதோ துண்டித்துக் கொண்டனர் என்பதை அறியாமலேயே அவர்களை நான் நேசித்து வந்தேன். நமது உணர்வுகள் எல்லாம் ஏற்கெனவே…

Read More

தற்போது மோடி அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை மசோதா 2019 : வரலாறும் நோக்கமும். ‘குடியுரிமை மசோதா 2016’ என பாஜக அரசு முன்மொழிந்திருந்த அரசியல் சட்டத் திருத்த மசோதா மூன்றாண்டு இடைவெளிக்குப் பின்,  2019 தேர்தலை ஒட்டி இப்போது இரண்டு நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு மசோதா போல் எல்லாக் கட்சிகளின் ஆதவோடும் இது இயற்றப்படவில்லை. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சி.பி.எம், முஸ்லிம் லீக், AIMIM, AIUDF முதலான கட்சிகள் இதை எதிர்த்துள்ளன. வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இந்தியாவை ஒட்டியுள்ள மூன்று நாடுகளிலிருந்தும் மத அடிப்படையிலான ஒதுக்கல்களால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்குள் இடம் பெயர்ந்து வந்திருந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வழி செய்யும் மசோதா இது. டிசம்பர் 31,2014க்கு முன் இவ்வாறு இம்மூன்று நாடுகளில் இருந்தும் இடம் பெயர்ந்து வந்துள்ள இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்துவர்கள், பவுத்தர்கள், பார்சிகள் ஆகிய முஸ்லிம் அல்லாதவர்கள் இதனால்…

Read More

எழுதியவர் : அஷ்ஃபாக் அகமது, சமூக ஊடகவியலாளர் உலகின் மிக மோசமான தொழிற்சாலை விபத்துகளுள் ஒன்று மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அரங்கேறியது. அது ஒரு பேரழிவு. உலகமே அதிர்ச்சியில் உறைந்து இந்தியாவை கொஞ்சம் உற்றுப்பார்த்தது. அந்த பேரழிவுக்கு காரணம் ஓர் அமெரிக்க ஆலை. அமெரிக்க நிறுவனத்துக்குச் சொந்தமான பூச்சிக்கொல்லி தயாரிக்கும் யூனியன் கார்பைட் ஆலை. ஆலையை நவம்பர் மாதத்திலேயே மூடிவிடலாம் என்று தான் அவர்கள் எண்ணி இருந்தனர். ஆனால் விதி என்னவோ டிசம்பரில் மக்களை காவு வாங்குவதற்காக காத்திருந்தது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி இரவு நடந்தது அந்த மீள முடியாத துயரம். அமைதி சூழ்ந்த இரவில் போபால் நகர மக்கள் இளைப்பாறிக் கொண்டிருந்த நேரம். நடுநிசி பொழுதில் திடீரென உறக்கத்தில் இருந்தவர்கள் இரும ஆரம்பித்தனர். சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பலருக்கு வாந்தி மயக்கம். யாருமே இதனை எதிர்பார்த்திருக்கவில்லை. கதவு ஜன்னலை அடைக்கத் தொடங்கினர்.…

Read More