இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்த கோவாக்சின் தடுப்பூசியின் தரம், செயல்திறன் ஆகியவற்றைக்காரணங் காட்டி அதனை வாங்கி விநியோகிக்கும் ஒப்பந்தம் பெற்ற நாடுகளில் மேற்படி தடுப்பூசி உபயோகத்துக்கு வருவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். கடந்த நவம்பர் மாதம் மூன்றாம் தேதியன்று தான் அவசரகால அனுமதியை கோவாக்சினுக்கு வழங்கியது உலக சுகாதார நிறுவனம். ஆனாலும் கோவாக்சின் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனங்களால் அங்கீகரிக்கப்படவில்லை. ஏனெனில் ஆரம்பம் முதலே கோவாக்சின் முறையான ஆராய்ச்சி படிநிலைகளைக் கடந்து வரவில்லை. மூன்று கட்டப் பரிசோதனைகளின் முடிவு வெளிவருவதற்கு முன்பாகவே அவசரகால தேவை, தேசபக்தி கூச்சல்களுக்கிடையே இந்திய தயாரிப்பு என்ற மார்தட்டலுடன் கொல்லைப் புற வழியாக உள்ளே நுழைந்த மருந்து இது. மருத்துவர்கள், தொற்றுநோய் நிபுணர்கள் ஆகியோரின் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் ‘ஆத்மநிர்பர்’ பெருமைப் பீற்றலுக்காக இந்திய மக்கள் மீது உரியதேசபக்த அழுத்தத்துடன்…
Author: லியாக்கத் அலி
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) விகிதம் 1947ல் இருந்த அளவுக்குக் கீழிறங்கப் போகும் அபாயத்தை சுட்டிக்காட்டி இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி போட்டிருக்கும் குண்டோடு இன்றைய இருள் கவ்வத் தொடங்கியிருக்கும் வேளையில் இதை எழுதுகிறோம். குஜராத் இனஅழிப்பையே பேசிக் கொண்டு இன்னும் வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்களா… அல்லது நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுப் போகப்போகிறீர்களா என்று வாய்ப்பந்தல் போட்டே வாக்குத் தேன்மாரிப் பொழியச் செய்த கவர்ச்சி நாயகனிடம் இப்போது வாய்தவறிகூட யாரும் வளர்ச்சியை பற்றிக் கேட்பதில்லை. எழுபது ஆண்டுகள் நாம் சந்திக்காத அதலபாதாள வீழ்ச்சி நம் கண்முன்னே நிழலாடும் நெருக்கடியைப் பற்றியும் யாரும் பேசப் போவதில்லை. நேரடியாக ஒத்துக் கொள்வது சிரமம் என்றாலும் திருவாளர் மோடி ஒரு காரியக்காரர் என்பதே இந்திய பொதுபுத்தியில் படிந்துவிட்ட சித்திரம். ஏனெனில் மோடி வகையறாக்கள் தங்கள் முதன்மை வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுகிறார்கள். அயோத்தியில் ராமர் கோவில், காஷ்மீர் சிறப்புரிமையை ரத்து செய்தல், பொது சிவில்…
இஸ்ரேல் – அமெரிக்காவின் நெருக்கடிகள் ஹமாஸின் தலைமையில் அமைந்த ஆட்சியை (அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஐநா சபை ஆகியவை இணைந்த) Quartet என்று வழங்கப்படும் நவீன சர்வதேச சதுர்வேதி மங்கலத்தினரால் ஜீரணிக்கவே முடியவில்லை. இஸ்ரேலின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ளுதல், ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுதல், முந்தைய இஸ்ரேலிய – பலஸ்தீன ஒப்பந்தங்களுக்கு ஒழுங்காற்றுதல் ஆகிய மூன்று நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஹமாஸ் ஆட்சிக்கு ஆதரவளிக்க முடியும் என்று சொல்லியிருந்த சர்வதேச தரப்பு, ஹமாஸ் இதற்கு உடன்படாத காரணத்தைக் காட்டியே பொருளாதார தடைகளை விதித்தது. இதே மூன்று நிபந்தனைகளை இஸ்ரேல் மீது திணித்து, ஒத்துவராத பட்சத்தில் பொருளாதார தடைகளை விதிக்க ஒருநாளும் சர்வதேச நீதி அமைப்புகள் துணிந்ததில்லை. அவ்வளவு ஏன் பலஸ்தீனம் எனும் நாடு இஸ்ரேலுக்காகவே துண்டாடப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டது என்ற உண்மையை ஒப்புக்கொண்டு அதன் இறையாண்மையை இஸ்ரேல் ஏற்க வேண்டும் என்பதைக் கூட இதுவரை சர்வதேச சனநாயகம் கண்டிப்புடன் சொன்னதில்லை. இப்படியொரு…
1990களில் தனது ஆயுதப் போராட்டத்தை தீவிரமாக தொடர்ந்து வந்த ஹமாஸ், மேற்குக்கரையில் வெறும் 18% நிலத்தின் மீதான ஆட்சி அதிகாரத்தை மட்டும் வழங்கியிருந்த ஒஸ்லோ ஒப்பந்தத்தை – அமைதி புறப்பாட்டில் இஸ்ரேலின் பிறிதொரு கண்துடைப்பாகவே கண்டது. விளைவு தற்கொலைப் படைத் தாக்குதல்களை ஹமாஸ் முடுக்கிவிட்டது. இந்நிலையில் ஹமாஸை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கியது இஸ்ரேல். ஹமாஸின் தலைவர்களில் பலர் வரிசையாக கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் சிறைபடுத்தப்பட்டனர். மேலும் பலஸ்தீனர்களுக்கு மத்தியில் அப்போது உச்சகட்ட செல்வாக்குப் பெற்றிருந்த அரபாத்தின் அமைதி முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போடுவதாக ஹமாஸ் மீது கற்பிக்கப்பட்ட அவப்பெயர், இயக்கத்தின் வெகுசன ஆதரவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைத்தது. இஸ்ரேலிய பழிவாங்கலில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், அரசியல் – சமூகரீதியான தனிமைப்படுதலை தவிர்க்கவும் ஹமாஸ் அடக்கி வாசிக்க முடிவு செய்தது. விளைவாக 1998 முதல் 2000 வரை தற்கொலைப் படைத் தாக்குதல்களை முற்றிலுமாக நிறுத்தியது ஹமாஸ். இதற்கிடையில் ஜூலை 2000 ஆண்டில் டேவிட்…
“நாங்கள் ஜெருசேலமைக் கைப்பற்றி விட்டோம். காலத்தால் கிழித்தெறியப்பட்ட இஸ்ரேலின் தலைநகரத்தை ஒழுங்காற்றி விட்டோம். இப்புனித தலத்திற்கு நாங்கள் திரும்பிவிட்டோம். இனி எக்காலத்திலும் இதை பிரியக்கூடாது என்ற உறுதியுடன்” இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மோஷே தயான் 1967 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஆறுநாள் போருக்கிடையில் சொன்ன வார்த்தைகள் இவை. இந்த எண்ணம் யூத ஆக்கிரமிப்பாளர்களுக்கு – சொல்லப் போனால் எல்லா ஊடுருவல்காரருக்கும் பொதுவானதுதான். இஸ்ரேலின் தந்தை என்று வர்ணிக்கப்படும் தியோடர் ஹெர்சில் 1895ல் தனது நாட்குறிப்பில் இப்படி எழுதினார்: “ஃபாலஸ்தீன ஏழைகளின் உடமைகளைப் பறிப்பதும் வெளியேற்றுவதும் ஒரே சமயத்தில் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் நடத்தப் படவேண்டும்”. இதை மறைக்கத்தான் எத்தனை யெத்தனை முகமூடிகள்.. எத்தனை கண்துடைப்பு நாடகங்கள்.. எத்தர்களும் தோற்றுப் போகும் மோசடி திட்டங்கள். அதே காலகட்டத்தில் (1964-73) நடந்த வியட்நாம் போரில் அமெரிக்கா லாவோஸ் மீது வீசிய குண்டுகளின் எடை 20 லட்சம் டன்கள். அதிகமான குண்டுகளால் சல்லடையாகத்…
முதலாம் உலக யூதர் மாநாடு உலக யூதர்களின் முதலாம் மாநாட்டை 1896 ஆகஸ்ட் 29,30,31ல் சுவிட்சர்லாந்த் நாட்டின் பேசல் நகரில் மிகவும் ரகசியமாக நடத்தினார் ஹெசில். அதில் தனது சியோனிஸ திட்டத்தின் 100 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில் யூதர்கள் செய்யத் தவறியது, செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது என அனைத்தும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டில் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மேக்ஸ் நோர்தேவின் வார்த்தைகளை வைத்து சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் “பொதுவாகவும் சட்டரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வாழ்விடத்தை யூதர்களுக்கென” உருவாக்குவது என்பதே மாநாட்டின் மைய நோக்கம். இதற்காக கிருத்துவர்களுடன் (அவர்கள் காலங்காலமாக நம் பகைவர்கள் ஆனாலும்) நட்புறவைப் பேண வேண்டும்.. பலஸ்தீனில் யூத குடியிருப்புகளுக்கு நிதியுதவி செய்திட யூத தேசிய வங்கியை ஏற்படுத்த வேண்டும்.. உலக சீயோனிஸ இயக்கத்தைத் தோற்றுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மேலும் யூத இஸ்ரேலுக்கான ஹத்திக்வா எனும் தேசிய…
நெப்போலியனின் கனவு திட்டம் 19ஆம் நூற்றாண்டின் வாசலில் அவர்களுக்கு ஒரு அருமையான வரவேற்பு காத்துக் கிடந்தது. 1799ல் பலஸ்தீன சிற்றரசாக விளங்கிய ஏக்ர் (அரபியில் அக்கா) பிரதேசத்தை கைப்பற்ற படை நடத்தி சென்ற சமயத்தில் ரமல்லா என்ற இடத்தில் முகாமிட்டுத் தங்கி அங்கே இருந்த யூதர்களைத் திரட்டி நிதி கேட்கும் ஊர்வலத்தை நடத்திய மாவீரன் நெப்போலியன், “துருக்கியரை வீழ்த்த நீங்கள் உதவி செய்தால் பலஸ்தீனத்தைக் கைப்பற்றி உங்களிடமே ஒப்படைப்பேன்” என்று வாக்குறுதி அளித்தான். “பரந்த நிலபரப்பைக் கொண்ட வலிமையான பேரரசுகள் மதத்திலிருந்தே தோற்றுவிக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டார் இஸ்லாமிய பேரறிஞர் இப்னு கல்தூன் (முக்கதிம்மா). உலகமகா சக்கரவர்த்திக்கான உந்துதலும் ஆற்றலும் அதிகம் பெற்றிருந்த நெப்போலியனுக்கும் மத முரண்களை தன் ஆதிக்க நலன்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் சாதுர்யம் இருந்ததில் வியப்பேதுமில்லை. இதன் மூலம் அவர் பிரெஞ்சு புரட்சியின் நவீன முற்போக்குக் கொள்கைகளான சமத்துவம், மத சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றைப் பரப்பும் உத்தியாகவும் இதனை…
அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கை பண்ணி, எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும் கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும், ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும், எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார். ஆதியாகமம் 15 : 18-21 கடவுளால் வாக்களிக்கப்பட்ட இந்த மண்ணில் முதன்முதலாக இறைத்தூதர் ஜோஷுவா தலைமையில் யூதர்கள் உள் நுழைந்தனர். இது நடந்தது கி.மு 1272 ஆம் ஆண்டு. இந்த யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தான் ஜோஷுவா (யூசா பின் நூன்) வின் பிரார்த்தனைக்கு செவி சாய்த்த இறைவன் சூரியனை ஒரு பொழுது தடுத்து நிறுத்தி வைத்தான். இதனை இமாம் அஹமது பின் ஹம்பல் தனது ஜலாலைனில் “புனித இல்லத்தை நோக்கி ஜோஷுவா புறப்பட்ட அந்த நாளைத் தவிர்த்து வேறு எப்போதும் யாருக்காகவும் சூரியன் தடுத்து நிறுத்தி வைக்கப்படவில்லை” என்று குறிப்பிடுகிறார்.…
எப்போதும் போல் ஆளும் பாஜக கட்சி தனக்குத் தெரிந்த – நன்கு பரீட்சித்து பெரும் பலன்களை ஈட்டிய வழிமுறைகளுக்குத் திரும்பியுள்ளது. தனது விரிவான சித்தாந்த சட்டகத்துக்குள் நின்று கொண்டு, இந்தியாவில் பெருந்திரளாக முஸ்லிம்கள் வாழும் இரண்டாவது பிரதேசத்தில் அவர்களின் வாழ்வியல் – கலாச்சாரத்தின் மீது தனது வன்மப் பார்வையை படிய விட்டுள்ளது.. எந்த விதத்தில், எப்படி இதை வன்மப் பார்வையாக பார்ப்பது? முதலாவது கொரானா பெருந்தொற்றை எதிர்கொண்டதில் பெரும் தோல்வியை சந்தித்துள்ள மோடி அரசு, அதற்கான எந்த பதிலையும் வழங்காமல் வாய்மூடி மௌனம் சாதிக்கிறது. ஆனால் மக்கள் தொடர்ந்து மௌனமாகவே இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது அல்லவா? இப்போது என்ன செய்வது? ஆட்சிக்கெதிரான கோபம் தம் மீது பாயாமல் வெகு மக்களை ஒரு பொது எதிர் தரப்பின் மீது திருப்பி விட்டால் அங்கே பற்றியெரியும் தீயில் கொஞ்சங் காலம் குளிர்காய்ந்து கொள்ளலாம். இதையொட்டி பாஜக அரசு தனது மேலாதிக்கக் கரத்தை இந்த…
பலநாடுகளில் மக்கள் பொறுப்புணர்வோடு நடந்திருக்கிறார்கள். அங்கே கொரானா கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. இந்தியாவில் ஏன் அப்படி நடக்கவில்லை.. ஒரே காரணம்! இங்கே ஆட்சியாளர்களுக்குப் பொறுப்பில்லை.. போன ஆண்டு இதே காலகட்டத்தில் * புலம்பெயர் தொழிலாளர்களை சோறு தண்ணியில்லாம அலையவிட்டது.. * ஒரு வழியாக அவர்கள் ஊர்திரும்ப ரயில் விட்ட பிறகும் அதற்கான கட்டணத்தைத் தர மாட்டேன் என்று நீதிமன்றத்திலேயே அழிச்சாட்டியமாக சொன்னது. * வெளியில் அலைந்து திரியும் தொழிலாளர்களுக்கு உணவு தானியங்களைக் கூட கொடுக்கக் கூடாதா? அதெல்லாம் மாநில அரசுகள் தர வேண்டும். * அதே போன்று நோய் பரிசோதனை தொடங்கி தடுப்பூசி வரை வரும்.. ஆனா வராது நிலை தான் எங்கும். .* ஊரடங்கு காலத்தில் எந்த நிவாரணத்தையும் மத்திய அரசு வழங்கவில்லை.. * பெருந்தொற்றையே காரணமாக கொண்டு ஓரளவுக்கேனும் நமக்கு வசமாகிக் கொண்டிருந்த பிற மருத்துவ வசதிகளைக் கூட உச்சாணிக் கொம்பில் கொண்டு வைத்துவிட்டு மற்ற நோய்களின் தாக்கத்தால் மரணங்கள்…