Author: முஜாஹித்

உத்திரப் பிரதேசத்தில் பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மர்ம நபர்களால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அரசின் ஆட்சியில் நரேந்திர தபோல்கர், கெளரி லங்கேஷ் என பல செயல்பாட்டாளர்கள் பாசிசத் துப்பாக்கிக்கு பலியாகியுள்ளனர். பலர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள அரசுக்கு உதாரணமாக பாஜகவினரால் உதாரணமாக கூறப்படும் யோகியின் உத்திரப்பிரதேசத்தில் தான் தற்போது துப்பாக்கி கலாச்சாரம் பெருகி இருக்கிறது. அம்மாநிலத்தில்,கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் எம்.பியும், அவரின் சகோதரரும் நீதிமன்ற வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதுபோல் பல்வேறு சம்பவங்களும் அந்த மாநிலத்தில் நடந்துவரும் நிலையில், தற்போது பாஜகவிற்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டு வந்த சந்திரசேகர் ஆசாத் சுடப்பட்டிருப்பது ஆர்எஸ்எஸ், பாஜகவின் சித்தாந்தத் தோல்வியையே காட்டுகிறது. சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடிவரும் ஆசாத் துப்பாக்கியால் சுடப்பட்டதற்கு பொதுவெளியில் பலமான கண்டனங்கள் எழ வேண்டியது அவசியம். இந்தத் துப்பாக்கிச் சூடு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதான…

Read More

இந்திய முஸ்லீம் சமூகம் வரலாற்றில் மிக உச்சத்தை தொடக்கூடிய வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தியது.டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய மாணவர் போராட்டம் இந்தியா முழுவதும் மாணவர் போராட்டமாக பிறகு மக்கள் போராட்டமாக மாறியது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இயக்கங்களும் போராட்டம் நடத்தினாலும் முஸ்லீம்களின் தன்னெழுச்சியான போராட்டம் ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.அந்த போராட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு ஒடுக்க அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்து அனைத்திலும் தோல்வியையே தழுவியது. அதற்கு காரணம் முஸ்லீம்களின் உறுதியான போராட்டமே ஆகும். இந்த போராட்டங்கள் இந்திய வரலாற்றில் ஒரு மைல் கல்லை அடைய இருந்த நேரத்தில் மத்திய அரசின் கவனமின்மையாலும் மேம்போக்கு தனத்தாலும் முன்னெச்சரிக்கையின்மையாலும் கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள் புகுந்தது.கொரோனா இந்தியாவிற்குள் புகுந்தாலும் அது ஒன்றும் செய்யாது யாரும் கவலைப்பட தேவையில்லை என வாய்ச்சவடால் மட்டுமே மோடி அரசு விட்டுக்கொண்டிருந்த நேரத்தில் மிக வேகமாக வைரஸ்…

Read More

ஜாதிக்கு எதிராக பல இடங்களில் தனது கருத்தை கூறும் கதாநாயகன் ஜாதி தலைவர் ஒருவரிடம் அவர் தொண்டர்கள் முன்னிலையில் பேசும் போது ஒரே ஜாதியாக இருந்தாலும் அவர் பணக்காரன் நீங்கள் ஏழை என்பதை புரிந்து கொள்ளுங்கள் என வர்க்க பேதத்தை அவர்களிடம் எடுத்து கூறுவார்.பார்ப்பனிய சித்தாந்தம் வேறூன்றி வர்ணாசிரம ஜாதி அமைப்பு நடைமுறையில் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் ஜாதி ஒழிப்பு,சமூகத்தில் சமத்துவம் என்பது தான் பிராதனம். வர்க்க பேதமும் ஒழிய வேண்டும் தான் என்றாலும் ஜாதி ஒழிப்பை பேசும் போது வர்க்க பேதத்தை முன்னிலைப்படுத்தினால் அது ஜாதி ஒழிப்பு பிரச்சாரத்தை நீர்த்து போக செய்து விடும்.அப்படி இருக்கையில் ஜாதி ஒழிப்பை பேசும் போது இத்தகைய கருத்தை வைக்காமல் இருந்திருக்கலாம். ஜாதிய உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும் ஜாதியை எதிர்த்தும் நீண்டகாலமாகவே தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.அதிலும் சில ஆண்டுகளாகவே ஜாதியத்திற்கு எதிரான படங்கள் அதிக அளவில் வெளி வந்து…

Read More

ஜனவரி மாதம் 27 ஆம் தேதி திருச்சியில் வழக்கம் போல அமைதியாக விடிந்தாலும் அந்த நாள் முழுவதும் அமைதியாக இல்லை.அதற்கு காரணம் திருச்சியின் முக்கிய பகுதியில் நடந்த படுகொலை. பொதுவாக கொலைகள் எந்த பகுதியில் நடந்ததோ அங்கு தான் பரபரப்பு ஏற்படும்.ஆனால் அன்று நடந்த படுகொலை தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஏன் என்றால் அந்த கொலையை செய்தவர் பாபு என்கிற இஸ்லாமியர் கொலை செய்யப்பட்டவர் விஜயரகு என்கிற பா.ஜ.க பிரமுகர்.இந்த கொலை நடந்த உடனேயே இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பா.ஜ.க பிரமுகர் கொலை என சமூக வலைத்தளங்கள் மூலமாக பரப்பி விடப்பட்டது. பா.ஜ.க வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இஸ்லாமிய பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தன் விஷத்தை டிவிட்டரில் கக்கினார்.நேரம் செல்ல செல்ல பரபரப்பும் அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சமும் மக்களிடையே நிலவியது. பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க வின் முக்கிய நிர்வாகிகள் திருச்சியில் முகாமிட்டனர்.எல்லோரும் ஒரே குரலில்…

Read More

இஸ்ரோ அனுப்பிய சந்திராயன்-2 ன் விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டு விட்டது என இந்திய மக்கள் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறார்கள்.இந்திய விண்வெளி துறை வரலாற்றில் நிகழ்ந்திருக்க கூடிய சாதனை நிகழாமல் போனது வருத்தமான ஒரு விடயமாகவே இருக்கிறது.அதே நேரத்தில் இன்று ஒரு பிரேதசத்தின் தகவல் தொடர்பு கடந்த இரண்டு மாதமாக துண்டிக்கப்பட்டுள்ளது குறித்து பெரிதாக யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை.அங்கு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என ஆட்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.ஆனால் உண்மையில் கடந்த காலங்களில் அந்த பிரேதசத்தை ஆட்சி செய்தவர்கள் நிலைமையே என்னவென்று தெரியாமல் தான் உள்ளது.இந்திய வரைப்படத்தில் தலைப்பகுதியில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மக்கள் காலம் காலமாக சொல்ல முடியாத அளவிற்கு பல்வேறு துயரங்களை சந்தித்து வருகின்றனர். காயம்பட்டு காயம்பட்டு வடுவாகிய அவர்களுடைய நெஞ்சில் கூறிய வாள் கொண்டு மேலும் குத்தியது மத்திய அரசு 370 சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம்,இதனால் பலனையும் மகிழ்சியையும் அடைந்தது பா.ஜ.க வும் அவர்களுடைய சங்பரிவார கூட்டங்களும்…

Read More

ஒரு இயக்கமோ, அமைப்போ அல்லது அரசியல் கட்சியிலோ ஒரே நபர் நீண்ட நாட்களாக தலைவராக இருந்தால் அவர் சர்வாதிகாரியாகத்தான் இருப்பார், அதனால் அவர் தலைமையின் கீழ் இயங்கும் அமைப்போ கட்சியோ ஒரு கட்டத்தில் அழிந்து விடும் என்கிற கருத்துதான் பொதுவான கருத்தாக நிலவிவருகிறது. சில நேரங்களில் அதை ஊர்ஜீதப்படுத்தும் விதத்தில் நேரடியாக நடைமுறையில் காணும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக ஒருவர் வாழ்ந்து வருகிறார், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றை மாற்றியமைத்த கட்சி,பெரியாரின் கொள்கைகளுக்கு அரசியல் வடிவம் கொடுத்து அதை மக்களிடம் கொண்டு சென்ற கட்சி, அக்கட்சிக்கு 1969 ஆம் ஆண்டு ஜீலை 27 ஆம் தேதி தலைவராக பொறுப்பேற்கிறார். அன்று முதல் கட்சியையும் தமிழ் நாட்டையும் தன் இரு கண்களாக பாவித்து வழிநடத்தினார்.  விளைவாக 5 முறை தமிழ் நாட்டின் முதலமைச்சராகவும் இருந்து இந்தியாவிலேயே தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் முதன்மையாக்கியதில்…

Read More

காணாமல் போகும் கருத்து சுதந்திரத்தை உடனடியாக மீட்டெடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை இந்தியாவில் கருத்து சுதந்திரம் மிக அபாயகரமான நிலையில் உள்ளது. இது கருணாநிதியை அவரது பிறந்த நாளான ஜீன் 3 ஆம் தேதி அன்று சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தபின் மூத்த பத்திரிக்கையாளர் ‘இந்து’ ராம் செய்தியாளர்களுக்கு கூறிய வார்த்தைகள். 2014 ஆம் ஆண்டு மோடி தலைமையில் பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற பிறகு அவரது அமைச்சரவையிலிருந்த அமைச்சர்களும், அவரது ஆதரவாளர்களும் தங்களது கருத்தை சுதந்திரமாக பேச தொடங்கினர். அந்த கருத்துக்கள் அனைத்தும் மக்களுக்கு எதிரான விஷம கருத்துக்களாகவே இருந்தன. உதாரணமாக ராமனை வணங்காதவர்கள் தவறான வழியில் பிறந்தவர்கள், பா.ஜ.க வை ஆதரிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்பன போன்ற கருத்துக்களை அவர்கள் பேசுவதற்கு முழு கருத்து சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது இன்றும் அளிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அதே நேரத்தில் பா.ஜ.க வை விமர்சிப்பவர்களும் அவர்களுடைய ஆட்சிக்கு…

Read More

பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் காலா படத்தை காண சென்றோம். ஆனால் அந்த படத்திற்க்கான டிக்கெட் இல்லாததால் வேறு வழியின்றி கோலி சோடா 2 படத்தை பார்ப்போம் என திரையரங்கிற்குள் சென்றோம்.முதல் 15 நிமிடங்கள் முடிந்த பின்பு உள்ளே சென்றாலும் இதனால் பெரிய நட்டம் இல்லை, அப்படி என்ன இந்த படத்தில் இருக்க போகிறது என எண்ணிக்கொண்டு தான்  படத்தை பார்க்க அமர்ந்தோம். ஆனால் படத்தை பார்த்துக் கொண்டிருந்த போது அதன் திரைக்கதை,வசனம் என எல்லாம் என்னை கட்டிப் போட்டு விட்டது. மூன்று கதை களம், அந்த மூன்று பேருக்கும் வழிகாட்டி ஆலோசனை வழங்குபவராக ஒருவர் என படம் நகர்ந்து கொண்டிருக்கிறது. மூன்றில் ஒருவர் நேர்மையாக உழைக்க வேண்டும் என்று வாழக்கூடியவர், அவரது நேர்மைக்கு பல பரிசுகள் கிடைத்துள்ளன. மேலும் தான் வாழ்வில் உயர வேண்டும், அதுவும் நேர்மையான முறையில் பொருளீட்டி என்கிற இலட்சியத்தோடு இருக்கிறார்.வட்டி வாங்கி தன்…

Read More

உங்களுக்கு உணவளிப்பது விவசாயிகள் தான் மாண்புமிகு ஆட்சியாளர்களே ஜீன் 12 ஒவ்வொரு ஆண்டும் தமிழக விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாள்.இந்த நாளில் தான் குறுவை சாகுபடிக்கு மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.அந்த நீரைக் கொண்டு குறுவை சாகுபடியை மேற்கொண்டு விளைச்சலை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு தமிழக விவசாயியும் குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள் காத்திருப்பார்கள்.ஆனால் அவர்களுக்கு பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சி வருகின்றன.சுதந்திர இந்தியாவில் சரியாக ஜீன் 12 அன்று 13 முறை மட்டுமே மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.2008 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு முறை கூட மேட்டூர் அணை ஜீன் 12 அன்று திறக்கப்படவில்லை.வட கிழக்கு பருவ மழையை கணக்கில் கொண்டு பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியிலிருந்தே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அன்றைய தினம் திறக்கப்பட்டால் தான் குறுவை சாகுபடியை முறையாக மேற்கொள்ள முடியும், காலம் தாழ்த்தி தண்ணீர் திறக்கும் போது அந்த நேரத்தில் அதிக அளவில் மழை…

Read More

பாசிசத்தின் வெளிப்பாடான நீட்டை அழிக்காவிட்டால் மரணங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும், காரணம் பாசிசத்தின் நோக்கம் மக்களை அளிப்பதே. மருத்துவப்படிப்பில் சேருவதற்க்கான நீட் தகுதி தேர்வால் தமிழகத்தில் நிலவி வரும் சமூக நீதி பாதிக்கப்படும்,மாணவர்களின் மருத்துவ கனவை தவிடுபொடியாக்கும்,பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மட்டுமே மருத்துவ கல்லூரியில் சேர போதுமான தகுதியாக உள்ளது, எனவே இத்தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் கூறி வந்தன.2016 ஆம் ஆண்டு ஓர் ஆண்டிற்கு தமிழகத்திற்கு விலக்கு பெற்று தமிழக மாணவர்களின் நலன் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தின் சமூக நீதியை காத்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் அவர் மறைவுக்கு பின்பு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அவருடைய அடிவருடிகள் 2017 ஆம் ஆண்டு நீட் தேர்விற்கு ஜெயலலிதா போல உறுதியோடு நின்று பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காததால் அந்த ஆண்டு நீட் தேர்வு தமிழகத்திற்க்கும் கட்டாயமாக்கப்பட்டது.மருத்துவ…

Read More